விருத்தாசலத்தில் சாலையோர வியாபாரிகளிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வாக்கு சேகரித்தார்.

 
தமிழகம்

விருத்தாசலத்தில் வீடு வாங்குவேன்: பிரேமலதா உறுதி

செய்திப்பிரிவு

மதச்​சார்பற்ற முற்போக்குக் கூட்ட​ணியில் விருத்​தாசலம் தொகுதியில் போட்டி​யிடும் தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா, நேற்று தனது பிரச்​சா​ரத்தை விருத்​தாசலம் விருத்​தகிரீஸ்வரர் கோயில் முன்பு நிறைவு செய்தார்.

அப்போது பேசிய பிரேமலதா, “விருத்​தகிரீஸ்வரர் அருளால் இத்தொகு​தியில் நான் வெற்றி பெறுவேன்​.​திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். நான் வெற்றி பெற்றதும் ஒவ்வொரு கிராமத்​திலும் வீதி வீதியாக சென்று மக்களைச் சந்திந்து நன்றி கூறுவேன். கேப்டன் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்வேன்.

‘விருத்​தாசலத்தை மாவட்​ட​மாக்க வேண்டும் ’ என்பது இத்தொகுதி மக்களின் கோரிக்​கையாக உள்ளது. அதை நிச்சயம் நிறைவேற்​று​வேன்.

நான் விருத்​தாசலத்தில் வீடு வாங்கி இங்கே தங்கி, விருத்​தாசலத்தின் மகளாக இருப்​பேன். தமிழகத்​திலேயே முன்மாதிரி தொகுதியாக விருத்​தாசலத்தை மாற்றிக் காட்டு​வேன்.

தேமுதிக திமுக கூட்ட​ணியில் இணைந்​தவுடன் பல்வேறு விமர்​சனங்கள் மூலம் திமுக கூட்ட​ணியில் சலசலப்பை உருவாக்​கலாம், குழப்​பத்தை ஏற்படுத்​தலாம் என எதிர்க்​கூட்​டணில் பல்வேறு முயற்​சிகள் மேற்கொண்​டனர். விசிக தலைவர் திருமாவளவன் தான் அனைவரையும் ஒருங்​கிணைத்து, அவற்றையெல்லாம் சரி செய்​திருக்​கி​றார்” என்று தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT