பிரேமலதா விஜயகாந்த்

 
தமிழகம்

மதுராந்தகத்தில் இன்று பிரேமலதா பிரச்சாரம்: அக்.1-ல் தாராபுரம் செல்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: திமுக வேட்​பாளர்​களை ஆதரித்​து, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா இன்​றும் அக்​.1-ம் தேதியும் பிரச்​சா​ரம் செய்​கிறார்.

இதுகுறித்து தேமு​திக தலைமை அலுவலகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மது​ராந்​தகம் மற்​றும் தாராபுரம் தொகு​தி​களில் போட்​டி​யிடும் திமுக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரேமலதா பிரச்​சா​ரம் செய்​ய​வுள்​ளார். அதன்​ படி இன்று (செப்.28) மது​ராந்​தகத்தில் மாலை 5 மணிக்கு நெல்​வாய்கூட்டு ரோட்​டிலும், 6 மணிக்கு எண்​டத்​தூரிலும் பிரச்​சா​ரம் செய்கிறார். தொடர்ந்​து, இரவு 7 மணிக்கு எலப்​பாக்​கத்​தில் நடை​பெறும் பிரம்​மாண்​டப் பொதுக்​கூட்​டத்​தில் உரை​யாற்​றுகிறார்.

இதையடுத்து அக்.1-ம் தேதி தாராபுரத்தில் மாலை 5 மணிக்கு மூலனூர் கிழக்கு ஒன்​றி​யம் - நால்​ரோடு (கருப்​பன் வலசு) பகு​தி​யிலும், 6 மணிக்கு கொளத்​துப்​பாளை​யம், கரையூரிலும் பிரச்​சா​ரம் செய்​கிறார். இரவு 7.30 மணிக்கு தாராபுரம் மேற்கு ஒன்​றி​யம் அலங்​கி​யம் பகு​தி​யில் பிரச்​சா​ரத்தை நிறைவு செய்​கிறார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT