பிரேம் ஆனந்த் சின்ஹா

 
தமிழகம்

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்

வெற்றி மயிலோன்

சென்னை: தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டு காவல் துறை அதிகாரிகளை மாற்றம் செய்து உள்துறை செயலாளர் கார்த்திக் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், தாம்பரம் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக இருந்த அருண், கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டார். அதன் பிறகு இப்பொறுப்பை, லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியான மகேஸ்வரி கூடுதலாக கவனித்து வந்தார். இந்தச் சூழலில், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT