தமிழகம்

நவம்பர் 1-ல் முதல்நிலைத் தேர்வு: குரூப்-2 தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

846 காலி இடங்களுக்கு 4.90 லட்சம் பேர் போட்டி

செய்திப்பிரிவு

சென்னை: குரூப்-2, 2-ஏ தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட் நேற்று வெளியானது. பல்​வேறு பத​வி​களில் 846 காலி இடங்​களை நிரப்​புவதற்​காக நடத்​தப்​படும் இந்​தத் தேர்வை 4.90 லட்​சம் பேர் எழுதுகின்றனர்.

தொழிலா​ளர் உதவி ஆய்​வாளர், துணை வணிக வரி அலு​வலர், இளநிலை வேலை​வாய்ப்பு அலு​வலர், சிறைத் துறை நன்​னடத்தை அலு​வலர், சார்-பதிவாளர், ஜெயிலர் உள்​ளிட்ட குரூப்-2 பத​வி​களில் 43 காலி இடங்​களை​யும், கூட்​டுறவு பால் சங்​கங்​களின் முது​நிலை ஆய்​வாளர், இந்து சமய அறநிலை​யத் துறை தணிக்கை ஆய்​வாளர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர், பேரூராட்சி செயல்-அலு​வலர் உள்​ளிட்ட குரூப்-2 ஏ பத​வி​களில் 846 காலி இடங்​களை​யும் நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குரூப்-2, 2-ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளி​யிட்டது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஆக.11-ம் தேதி தொடங்கி செப்.9-ம் தேதி முடிவடைந்​தது. இந்​தத் தேர்​வுக்கு 4 லட்​சத்து 89,884 பேர் விண்​ணப்​பித்​தனர். முதல்​நிலைத் தேர்வு நவ.1-ம் தேதி நடத்​தப்​படும் என அறி​விக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், குரூப்-2, 2-ஏ தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டிருப்​ப​தாக டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இது​தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ப. வெங்​கடபி​ரியா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​பதாவது:

ஒருங்​கிணைந்த குரூப்-2, 2-ஏ பத​வி​களுக்​கான முதல்​நிலைத் தேர்வு நவ.1-ம் தேதி நடை​பெற உள்​ளது. இந்​தத் தேர்​வெழுத அனுமதிக்​கப்​பட்ட விண்​ணப்​ப​தா​ரர்​களின் ஹால் டிக்​கெட் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. விண்​ணப்​ப​தா​ரர்​கள் தங்​களு​டைய ஒரு முறை பதிவு (ஒடிஆர்) வாயி​லாக விண்​ணப்ப எண் மற்​றும் பிறந்த தேதி​யைக் குறிப்​பிட்டு ஹால் டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

இந்​தத் தேர்​வில் பொது அறிவு பகுதி​யில் 100 கேள்​வி​களுக்​கும் (150 மதிப்​பெண்), பொது தமிழ் அல்​லது பொது ஆங்​கிலம் பகுதி​யில் 100 கேள்​வி​களுக்​கும் (150) விடையளிக்க வேண்​டும். மொத்​தம் 300 மதிப்​பெண். முதல்​நிலைத் தேர்​வில் இருந்து ‘ஒரு காலி இடத்​துக்கு 10 பேர்’ என்ற விகிதாச்​சா​ரத்​தின் அடிப்​படை​யில் குரூப்-2 மெயின் தேர்​வுக்​கும், குரூப்-2-ஏ மெயின் தேர்​வுக்​கும் விண்​ணப்​ப​தா​ரர்​கள் தேர்வு செய்​யப்​படுவர்.

இறுதி​யாக, மெயின் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் பணி நியமனம் நடை​பெறும். குரூப்-2, 2-ஏ பத​வி​களுக்கு நேர்​முகத் தேர்வு கிடை​யாது. மெயின் தேர்​வில் அதிக மதிப்​பெண் பெற்​றால் அரசு வேலை உறுதி என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT