உள்படம்: ந.செல்வகுமார்

 
தமிழகம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்: தனியார் வானிலை ஆய்வாளர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருச்சி: டிட்வா புயல் காரண​மாக சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் எச்​சரித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: டிட்வா புயல் இன்று (டிச. 1) சென்​னைக்கு அரு​கில் வடக்கு நோக்கி நகர்ந்து பழவேற்​காடு வரை செல்​லும். இரவு ‘யூ டர்ன்’ எடுத்து சென்​னைக்கு கிழக்கே நகர்ந்​து, வரும் 3-ம் தேதி வட கடலோர மாவட்​டங்​களுக்கு அப்​பால் நகர்ந்து 4, 5-ம் தேதி​களில் டெல்டா மாவட்​டங்​கள் நோக்​கிப் பயணிக்​கும். அப்​போது, காற்று சுழற்​சி​யாக செயலிழந்து டெல்​டா, தென் மாவட்​டங்​கள் ஊடாக அரபிக்​கடலை நோக்கி நகரும்.

இதன் காரண​மாக சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் இன்று காலை முதல் நாளை இரவு வரை மித​மான மற்​றும் சற்று கனமழை பெய்​யும். குறிப்​பாக, கடலோரப் பகு​தி​களில் அதிக மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

வட உள் மாவட்​டங்​களில்.. அதே​நேரத்​தில், வட உள் மாவட்​டங்களில் ஆங்​காங்கே மித​மானது முதல் சற்று கனமழை பெய்​யும். எனவே, இன்​றும், நாளை​யும் சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டியது அவசி​ய​மாகும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT