தமிழகம்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதா? - ‘ஆய்வு செய்துதான் கூற முடியும்’ என்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி

செய்திப்பிரிவு

சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சார்பில் மாநில அளவிலான தொழில்முனைவோர் கருத்தரங்கு, துணைவேந்தர் (பொ) ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி. பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் வளர்ச்சியை ஜிஎஸ்டி வருவாயை மட்டும் வைத்து எடை போட முடியாது. இதனால், தமிழகத்துக்கு பொருளாதார பாதிப்பு என்பது கிடையாது. தமிழகத்தின் கடன் சுமை மிக அதிகமாக உள்ளது. வட்டி, கட்டாயச் செலவு சுமையும் கூடியுள்ளது.

பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகம். கடந்த 15 ஆண்டுகளாக கடன் வாங்கி அரசு நடத்தி வரும்போது, புதிதாக அமைந்த தவெக அரசால் கடன் வாங்காமல் செலவு செய்ய முடியாது. முதல்வர் கூறியது போன்று கஜானா காலியாக உள்ளது. தமிழக கடன் சுமை அடுத்த 4 ஆண்டுகளில் குறையும் என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்திய அளவில் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது உண்மைதான். விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு எவ்வளவு என்பதை பார்க்க வேண்டும். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதா என்பதை ஆய்வு செய்துதான் கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT