தமிழகம்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் கோருவது சட்டவிரோதமானது: பி.ஆர்.பாண்டியன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டு விவ​காரத்​தில் புதிய நடு​வர் மன்​றம் கோரு​வது சட்​ட​விரோத​மானது என்று தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளர்.

இதுகுறித்து மன்​னார்​குடி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: முந்​தைய திமுக தலை​மையி​லான தமிழக அரசு மேகே​தாட்டு அணைக்கு புதிய நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என தன் விருப்​பத்​துக்கு மத்​திய அரசுக்கு கடிதம் எழு​தி​யது, நாம் பெற்ற காவிரி உரிமையை பறி​கொடுப்​ப​தற்கு சமமாகும்.

அனைத்​துக்​கட்சி கூட்​டத்​திலோ அல்​லது சட்​டப்​பேரவை கூட்​டத்​திலோ விவா​திக்​காமல் தன் விருப்​பத்​துக்கு கடிதம் எழு​தி​யது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. இக்​கடிதம் சட்​ட​விரோத​மானது என தமிழக அரசு சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்க முன்வர வேண்​டும்.

மேகே​தாட்டு வரைவு திட்ட அறிக்​கையை காவிரி மேலாண்மை ஆணை​யம் சட்​டப்​படி விவா​திக்​க​வும், அனு​ம​திக்​க​வும் முடி​யாது என்று திருப்பி அனுப்பி நிராகரித்​ததை தொடர்ந்​து, மத்​திய நீர்வள ஆணை​ய​மும் நிராகரிக்க வேண்​டும் என்ற தீர்​மானம் மட்​டுமே சட்​டப்​பேர​வை​யில் மீண்​டும் நிறைவேற்ற வேண்​டும்.

கடந்த திமுக அரசு தான்​தோன்​றித்​தன​மாக, சட்​ட​விரோத​மாக எழு​திய கடிதத்தை நியாயப்​படுத்​து​வதற்​காக முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசை சட்​டப்​பேர​வை​யில் தவறாக பயன்​படுத்த முயற்​சித்​துள்​ளனர். எனவே, எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் வேண்​டு​கோளை தீர்​மானத்​தில் இணைத்​தது மிகப்​பெரிய வரலாற்​றுப் பிழை​யாகும். அதை நிராகரிக்க வேண்​டும்.

மேகே​தாட்​டுக்​காக நடு​வர் மன்​றம் வேண்​டும் என்று கோரு​வது உச்ச நீதி​மன்​றம், காவிரி நடு​வர் மன்​றம் அளித்த இறுதி தீர்ப்​புக்​கும், மத்​திய அரசிதழில் வெளி​யிட்​டப்​பட்ட அரசாணை​களுக்​கும் முரணானது என உணர்ந்து உடனடி​யாக முதல்​வர் அதை நீக்க வேண்​டும் என வலி​யுறுத்​துகிறோம்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT