அமைச்சர் நிர்மல் குமார் |கோப்புப் படம்

 
தமிழகம்

தமிழகத்தில் திடீர் மின்வெட்டு ஏன்? - அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

வெற்றி மயிலோன்

சென்னை: “காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் தமிழகத்தில் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” என மின்வெட்ட்டுப் பிரச்சினை குறித்து தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.

நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

SCROLL FOR NEXT