எடப்பாடி பழனிசாமி

 
தமிழகம்

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, அவர்களுக்கு பதிலாக 17 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக, பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் கொண்டு வந்த, தவெக ஆட்சி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரித்து சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். எதிர்த்து பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

பழனிசாமியை எதிர்த்து செயல்பட்ட நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மொத்தம் 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, பல்வேறு தொகுதிகளை சேர்த்து, 17 மாவட்டங்களாக குறைத்து, அவற்றுக்கான புதிய மாவட்ட செயலாளர்களையும் பழனிசாமி நியமித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலையச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து சி.வி.சண்முகம், அமைப்புச் செயலாளர், திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து காமராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் அமைப்புச் செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து சி.விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து பி.தங்கமணி, அமைப்புச் செயலாளர், தருமபுரி மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து கே.பி.அன்பழகன், அமைப்புச் செயலாளர், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து பா.பென்ஜமின், அமைப்புச் செயலாளர், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் அமைப்புச் செயலாளர், தேனி மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து ஜக்கையன், அமைப்புச் செயலாளர், திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து இசக்கி சுப்பையா, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.சி.சம்பத், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கே.சி.வீரமணி கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து இராமலிங்கம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அருண்மொழிதேவன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், நீலகிரி மாவட்ட செயலாளர் வினோத், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து இன்று முதல் நீக்கப்படுகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட செயலாளராக ஆர்.பசுபதி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக செ.ம.வேலுசாமி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக வி.பழனிவேல், நாமக்கல் மாவட்ட செயலாளராக கே.பி.பி.பாஸ்கர், திருவாரூர் மாவட்ட செயலாளராக ஆர்.டி.மூர்த்தி, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக ரவிசந்திரன், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக ஏ.பி.எஸ்.லோகநாதன் லோகநாதன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக சுமைதாங்கி சி.ஏழுமலை, திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக எஸ்.பசுபதி, கடலூர் மாவட்ட செயலாளராக எம்.சி.தாமோதரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக எம்.ராமு, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.மனோகரன், நீலகிரி மாவட்ட மாவட்டச் செயலாளராக பால.நந்தகுமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக சி.கார்த்திகேயன், கரூர் மாவட்ட செயலாளராக கே.கமலக்கண்ணன், தேனி மேற்கு மாவட்ட செயலாளராக வி.டி.நாராயணசாமி, திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளராக கே.ராமசுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT