தமிழகம்

தமிழகத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடம் ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல் துறை​யில் புதி​தாக பணி​யில் சேர்ந்த 14 ஐபிஎஸ் அதி​காரி​களுக்கு தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் பணி​யிடம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: ஐபிஎஸ் அதி​காரி​யான அன்​ஜித் ஏ நாயர் தூத்​துக்​குடி உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், பி.அங்​கிதா பட்​டுக்​கோட்டை உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், எஸ்​.அஸ்​வினி திருச்​செங்​கோடு உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், பிஸ்​வஜித் பாண்டா திருநெல்​வேலி ஊரக உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதே​போல், சத்​ரியா கவின் டிஜே சிதம்​பரம் உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், எஸ்​. இன்பா திரு​வெறும்​பூர் உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், பி.மஞ்​சிமா திண்​டுக்​கல் உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், மன்​னம் சுஜித் சம்​பத் ராசிபுரம் உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

நீல் சர்மா கோவில்​பட்டி உட்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், கே.நேஹா ராம​நாத​புரம் உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், பிரி​யங்கா பார்​கவ் நாகப்​பட்​டினம் உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், ராகுல் வி கோபால் திருவண்​ணா​மலை ஊரக உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், சைந்​தானே ஸ்வப்​னிலா அணில் ராஜ​பாளை​யம் உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், தனூ சிங்மதுரை மாவட்​டம், ஊமச்​சிகுளம் உள்​கோட்ட உதவி எஸ்​பி​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இவர்​கள் அனை​வரும் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்​று, தமிழக கேடர் அதி​காரி​களாக நியமிக்​கப்​பட்​ட​வர்​கள். இந்த 14 பேரும் பயிற்சி முடித்து தற்​போது புதி​தாக பணி​யில்​ சேர்ந்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT