தமிழகம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தபால் வாக்குகள் பெறும் பணிகள் தொடக்கம்

செய்திப்பிரிவு

மதுராந்தகம்/ தாராபுரம்: மது​ராந்​தகம், தாராபுரம் சட்​டப்​பேரவை தொகு​தி​களில் தபால் வாக்​கு​கள் பெறும் பணி​கள் தொடங்​கி​யுள்​ளன.

இரு தொகு​தி​களி​லும் வரும் அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்நிலையில், முதிய வாக்​காளர்​களிடம் தபால் வாக்​கு​கள் பெறும் பணி​கள் நேற்று தொடங்​கின. இதற்​காக, மது​ராந்தகம் தொகு​தி​யின் தேர்​தல் நடத்​தும் அலு​வலர் உத்​தர​வின்பேரில் 8 குழுக்​கள் அமைக்கப்​பட்​டு 85 வயதுக்கு மேற்​பட்​டோர் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் என 931 வாக்​காளர்​களிடம் தபால் வாக்​கு​களைப் பெற உள்​ளனர்.

மேலும், சிறப்பு குழு​வினர் 85 வயது மேற்​பட்ட நபர்​களின் வீடு​களுக்குச் சென்று வாக்​குகளை பெறும் பணி​களிலும் ஈடுபட உள்​ள​தாக தேர்தல் அலுவலக வட்​டாரங்​கள் தெரிவித்தன.

இதேபோல் தாராபுரம் தொகுதியில் மொத்தம் 1,236 பேர் தபால் வாக்கு செலுத்தத் தகுதி பெற்றுள்ளனர். தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணிக்காக மொத்தம் 30 சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் தலா 6 அதிகாரிகள் வீதம் மொத்தம் 180 தேர்தல்அலுவலர்கள் கொண்ட குழுவினர் இப்பணியில்ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT