கோப்புப்படம்
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம், புதுச்சேரியில் இன்றுடன் வறண்ட வானிலை முடிந்து, நாளை (ஜன. 23) மற்றும் நாளை மறுநாள் கடலோரப் பகுதிகளிலும், வரும் 25 முதல் 27 வரை சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். உள் பகுதியில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நீலகிரி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஜன. 21-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தருமபுரியில் 16.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.