தமிழகம்

தரணியெங்கும் களை கட்டியது தமிழர் திருநாள்: பிரதமர், முதல்வர் கொண்டாட்டம்

பொங்கல் வைத்து தலைவர்கள் உற்சாகம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி / சென்னை: டெல்​லி​யில் பிரதமர் மோடி​யும் சென்​னை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினும் பொங்​கல் விழாவை உற்​சாக​மாகக் கொண்​டாடினர்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன்,ஆண்​டு​தோறும் டெல்​லி​யில் உள்ள தனது இல்​லத்​தில் பொங்​கல் விழாவை கொண்​டாடி வரு​கிறார்.

இந்த ஆண்டு ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற கருப்​பொருளில் பொங்​கல் விழா அவரது இல்​லத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த விழா​வில் பங்​கேற்று பிரதமர் மோடி பேசி​ய​தாவது: விவ​சா​யிகளின் கடின உழைப்பை கொண்​டாடும் வகை​யிலும், வேளாண் பொருட்​கள் விளைவதற்கு முக்​கிய​மான நிலம், சூரியனுக்கு நன்றி செலுத்​தும் வகை​யிலும் பொங்​கல் பண்​டிகை கொண்​டாடப்​படு​கிறது.

நன்றி என்​பது வெறும் வார்த்​தையை​யும் தாண்டிநமது அன்​றாட வாழ்​வில் இருக்க வேண்​டும் என்​பதை நினை​வுப்​படுத்​தும் வகை​யில் பொங்​கல் பண்டிகைஉள்​ளது. இந்த நிலம் நமக்கு ஏராள​மானவற்றை தரும் போது, அதை மேம்​படுத்​து​வதும் பாது​காப்​பதும் நமது பொறுப்​பு.

இந்​தி​யா​வில் மட்​டுமல்ல, உலகம் முழு​வதும் உள்ள தமிழர்​கள் கலாச்​சா​ரத்தை உற்​சாகத்​துடன் வளர்த்து வரு​கின்​றனர். அவர்​களில் ஒரு​வ​ராக நான் இருப்​ப​தில் பெருமை அடைகிறேன். உலகின் மிக மிகப் பழமை​யானது தமிழ் கலாச்​சா​ரம். இந்​தக் கலாச்​சா​ரம் எதிர்​காலத்​துக்கு வழி​காட்​டி​யாக, பல நூற்​றாண்​டு​களின் ஞானத்​தை​யும் பாரம்​பரி​யத்​தை​யும் தன்​னகத்தே கொண்​டுள்​ளது. இந்த பொங்​கல் நாளில் நம்​பிக்​கை, ஒற்​றுமை ஆகியவை இந்​தி​யாவை இன்​னும் முன்​னேற்​றத்​துக்கு கொண்டு செல்​லும் என்ற உணர்வு மேலோங்​கு​கிறது.

இயற்​கை, குடும்​பம், சமூகம் ஆகிய​வற்றை சமநிலை​யுடன் வைத்​துக்கொள்​வதற்​கான முக்​கி​யத்​து​வத்தை இந்தப் பொங்​கல் பண்​டிகை வலி​யுறுத்​துகிறது. நிலத்​தின் வளம், தண்​ணீர் சேமிப்​பு, எதிர்​கால சந்​த​தி​யினருக்​காக இயற்கை வளங்​களை அறி​வுப்​பூர்​வ​மாக பயன்​படுத்​து​வது அவசி​யம். இவ்​வாறு பிரதமர் மோடி கூறி​னார்.

மேலும், தமிழ், ஆங்​கிலத்​தில் எழு​திய கடிதத்​தை​யும் பிரதமர் மோடி வெளி​யிட்​டார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: அன்​பான எனதருமை குடிமக்​களே, வணக்​கம். உங்​களுக்​கும் உங்​கள் குடும்​பத்​தினருக்​கும் எனது மனமார்ந்த பொங்​கல் வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். இந்த பொங்​கல் பண்​டிகை மனித உழைப்​புக்​கும், இயற்​கைக்​கும் உள்ள நெருங்​கிய தொடர்பை நினை​வூட்​டு​கிறது. இந்த பண்​டிகை வேளாண்​மை, கடின​மாக உழைக்​கும் விவ​சா​யிகள், கிராம வாழ்க்​கை, வேலை​யில் கவுர​வம் ஆகிய​வற்​றுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்​டது.

உலகின் மிகப் பழமை வாய்ந்த மொழியான தமிழ் எங்​கள் நாட்​டில் உள்​ளது என்ற பெருமை நமக்​குண்​டு. அதே​போல் உலகெங்​கிலும் உள்ள தமிழர்​கள் கொண்​டாடும் பொங்​கல் பண்​டிகை இந்​தி​யா​வுக்கு மட்​டுமல்​லாமல், உலகம் முழு​வதற்​கு​மான​தாக பரவி​யுள்​ளது. இந்த பண்​டிகை உங்​கள் வாழ்​வில் வளம், வெற்​றி, நல்ல உடல்​நலத்தை ஒவ்​வொரு​வருக்​கும் வழங்​கட்​டும் என்று வேண்​டிக் கொள்​கிறேன். இவ்​வாறு பிரதமர் மோடி கடிதத்​தில் கூறி​யுள்​ளார்.

முதல்​வர் கொண்​டாட்​டம்: சென்னை தலைமைச் செயல​கத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சமத்​து​வப் பொங்​கல் பண்​டிகை​யைக் கொண்​டாடி​னார். நிகழ்ச்​சி​யில் பானை​யில் பொங்​கல்வைத்​து, தலை​மைச் செயலக அலு​வலர்​களு​டன் அவர் பொங்​கல் விழா கொண்​டாடி​னார். பின்​னர் நடை​பெற்ற நாகஸ்வர இசை நிகழ்ச்​சியை முதல்​வர் ஸ்டா​லின் கேட்டு ரசித்​ததுடன், தலை​மைச்செயலர், துறைச் செயலர்​கள், துறைத் தலை​வர்​கள், அரசு உயர​தி​காரி​கள், தலை​மைச் செயலக அலு​வலர்​களுக்கு பொங்​கல் வாழ்த்​துகளை தெரி​வித்​தார்.

அதன்​பின் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: தமிழகம் முழு​வதும் நாம் சமத்​து​வப் பொங்​கலைக் கொண்​டாடிக் கொண்​டிருக்​கிறோம். “எல்​லோர்க்​கும் எல்​லாம்” என்ற இலக்கை நோக்​கி, சமத்​துவ நிலையை அனை​வரும் அடை​யும் நோக்​கத்​தோடு, நமது அரசு பணி​யாற்​றிக் கொண்​டிருக்​கிறது; இன்​னும் சொல்​லப் போனால் உழைத்​துக் கொண்​டிருக்​கிறது. உழைத்​துக்கொண்​டிருப்​பவர்​கள் என்​றால் நாங்​கள் மட்​டுமல்ல, நீங்​களும் சேர்ந்​து​தான் உழைத்​துக் கொண்​டிருக்​கிறீர்​கள்.

தமிழக மக்​களின் தேவை​களைப் பூர்த்தி செய்​வதற்​காகத் தலை​மைச் செயல​கத்​தில் நீங்​கள் எல்​லோரும் நேரம், காலம் பார்க்​காமல், உழைத்​துக் கொண்​டிருக்​கிறீர்​கள். அப்​படிப்​பட்ட உங்​களோடு, இந்த பொங்​கலை கொண்​டாடு​வ​தில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்​சி, உங்​கள் உள்​ளங்​களி​லும், உங்​களு​டைய இல்​லங்​களி​லும், பொங்​கட்​டும்! பொங்​கட்​டும்! உங்​கள் அனை​வருக்​கும் என்​னுடைய பொங்​கல் நல்​வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறன். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

SCROLL FOR NEXT