தமிழகம்

கொலை குற்றங்கள் அதிகரிப்பது ஆட்சியின் தோல்வியாக கருதப்படும்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: பெசன்ட்​நகர் கொலை சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்த அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், “கொலைக் குற்​றங்​கள் அதி​கரிப்​பது ஆட்​சி​யின் தோல்​வி​யாக கருதப்​படும்” என தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்: காவல்​துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது முதல்​வர் பதி​லுரை அளிப்​ப​தற்கு முன்​பாகவே, அவரது கட்​சிப் பிர​முகர் ஒரு​வரே, சென்​னை​யில் கொலைக்கு ஆளாகி​யுள்​ளார். அது​வும் சாலை​யில் ஓட, ஓட விரட்டி கொல்​லப்​பட்​டுள்​ளார்.

இது​தான் தமிழகத்​தின் ‘வெற்றி சட்​டம்​-ஒழுங்​கு’ நிலை. சென்னை சாலை​யில் இப்​படி ஒரு கொலை நடக்​கும் அளவுக்கு சட்​டம்​-ஒழுங்கு சீர்​கெட்டு போயிருப்​பதை நினைத்து வருந்​து​வதா அல்​லது சரித்​திரப்பதிவேடு குற்​ற​வாளி​கள் எல்​லாம் தஞ்​ச​மாகும் வகை​யில் தவெக இருப்​பதை நினைத்து வருந்​து​வ​தா? இதற்​கும் திமுகவை எப்​படி குற்​றம் சொல்​லலாம் என யோசிப்​பதை நிறுத்​தி​விட்​டு, பொது​மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்​கான நடவடிக்​கைகளை அரசு மேற்​கொள்ள வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: சென்னை பெசன்ட் நகரில் ஆளும் தவெக​வின் நிர்​வாகி​யும், கொலை உள்​ளிட்ட குற்​ற வழக்​கு​களில் சம்​பந்​தப்​பட்​ட​ வரு​மான கண்​ணன் என்​பவரை, ஒரு கும்​பல் வெட்டி படு​கொலை செய்​திருப்​பதும் மக்​களிடையே அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் கொலை, கொள்​ளை​களை தடுக்க எந்த நடவடிக்​கை​யும் அரசு மேற்​கொள்​ள​வில்லை என்​ப​தையே இந்​நிகழ்​வு​கள் காட்​டு​கின்​றன. கொலைக் குற்​றங்​கள் அதி​கரிப்பது ஆட்​சியின் தோல்​வி​யாகவே கருதப்​படும். இத்​தகைய குற்​றங்​கள் இனி​யும் நடக்​காத வகை​யில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: தமிழகத்​தின் சட்​டம் - ஒழுங்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்​கிறது. தமிழக அரசு சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினை குறித்து வெறும் விளக்​கங்​களை மட்​டுமே அளித்து வரு​வதை விட்​டு​விட்டு மக்​களின் உயிருக்​கும், உடைமை​களுக்​கும் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும்.

காவல் துறை, குற்​றம் நடந்த பின்​னர் கைது செய்​வது போன்ற நடவடிக்​கைகளை எடுப்​பது மட்​டும் போதாது. குற்​றங்​கள் நடை​பெறு​வதற்கு முன்பே அவற்றை தடுக்​கும் வகை​யில் செயல்பட வேண்​டும். போதை மற்​றும் மது கலாச்​சா​ரத்​துக்கு எதி​ராக விழிப்​புணர்வு பரப்​புரை இயக்​கத்தை தமிழக அரசு நடத்த வேண்​டும்.

ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து: சென்​னை​யில் தவெக நிர்​வாகி கண்​ணன் வெட்டி படு​கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் மிகுந்த அதிர்ச்​சி​யை​யும், மக்​களின் பாது​காப்பு குறித்த கவலை​யை​யும் ஏற்​படுத்​துகிறது. தமிழகத்​தில் தொடரும் கொலை, கொள்​ளை, பொதைப்​பொருள் குற்​றச்​சம்​பவங்​கள் பொது​மக்​களிடையே பாது​காப்பு குறித்த அச்​சத்தை மேலும் அதி​கரித்​துள்​ளன.

இச்​சூழல் மிக​வும் கவலைக்​குரியது. இவற்றை தடுக்க காவல்​துறை ஏஐ தொழில்​நுட்​பங்​களை பயன்​படுத்தி கண்​காணிப்பை தீவிரப்​படுத்த வேண்​டும்.

SCROLL FOR NEXT