தமிழகம்

‘திரைமொழியில் தனி​மொழி பேசிய இயக்குநர்...’ - அரசி​யல் தலைவர்கள் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் (தமிழக ஆளுநர்): கிராமிய வாழ்​வை​யும் மனித உணர்​வு​களை​யும் உண்​மைத் தன்​மை​யுடன் வெளிப்​படுத்​திய பார​தி​ராஜா​வின் படைப்​பு​கள் தமிழ் திரைப்பட உலகில் அழி​யாத தடம் பதித்​துள்​ளன. அவரின் குடும்​பத்​தினருக்​கும் திரை​யுல​கினருக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கல்​கள்.

மு.க.ஸ்​டா​லின் (திமுக தலைவர்): திரைமொழி​யில் தனி​மொழி பேசித் தனிச் சகாப்​தத்தையே உரு​வாக்​கிய​வர் பார​தி​ராஜா. ஸ்டூடியோக்​களுக்​குள் அடைபட்​டிருந்த கேம​ராக்​கள் பார​தி​ராஜா​வால் கிராமங்​களுக்​குள் நுழைந்​தன.

கிராமத்து மனிதர்​களை​யும் அவர்​களது வாழ்க்​கை​யை​யும் திரைக்​குக் கொண்டு வந்​து, தமிழ்ச்​சினி​மாவை யதார்த்​தத்​துக்கு மிக அரு​கில் கொண்டு சென்​றார்.

அவரது படைப்​பு​களைத் தமிழ்ச்​சினி​மா​வின் வரலாற்றை எழுதும் எவர் ஒரு​வரும் தவிர்க்க முடி​யாது. இந்​தி​யத் திரை வரலாறு என்​றைக்​கும் உச்​சத்​தில் வைத்து அவரை நினை​வு​கூரும்.

பழனி​சாமி (அதி​முக பொதுச்​செய​லா​ளர்): தமிழ் சினி​மாவை தமிழ் மண்​ணுக்​குரிய விழு​மி​யங்​களோடு உலகம் திரும்​பிப் பார்க்​கச் செய்​தவர் பார​தி​ராஜா. அவர்​தம் மறைவு என்​பது ஈடு​செய்ய முடி​யாத பேரிழப்​பாகும்.

“என் இனிய தமிழ் மக்​களே” என்ற அவரது குரல் சினிமா உள்​ளவரை நிலைத்து நிற்​கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்​பத்​தா​ருக்​கும், திரைத் துறை​யினருக்​கும், ரசிகர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக்​கொள்​கிறேன்.

வைகோ: திரை உலகின் ஈடிலா பேரொளி அணைந்​து​விட்​டது. ஆனால், அந்த ஒளி வெள்​ளத்​தின் பிர​காசம் இருளை​யும், இரவு​களை​யும் கடந்து இன்​னும் பன்​னூறு ஆண்​டு​களுக்கு ஜொலித்​துக் கொண்டே இருக்​கும். நான் உயி​ராக நேசித்த பார​தி​ராஜா எனும் உன்​னதப் படைப்​பாளி போய்​விட்​டாரே! அந்த இடத்தை நிரப்​புவதற்கு எவராலும் இயலாது.

நயி​னார் நாகேந்​திரன் (பாஜக தலை​வர்): தமிழ் மக்​களின் இதயங்​களில் நிலை​யான இடம்​பிடித்த மூத்த திரைப்பட இயக்குநர் பார​தி​ராஜா அவர்​களின் மறைவு செய்தி வேதனையை​யும் பேரிழப்​பை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவரது ஆன்மா இறைவன் திரு​வடி​யில் சாந்​தி​யடைய எல்​லாம் வல்ல இறைவனை பிரார்த்​திக்​கிறேன்.

ரஜினி​காந்த்: பார​தி​ராஜா​வின் திறமை, சாதனை பற்றி அனை​வருக்​கும் தெரி​யும். சினிமா துறை​யில் யாருக்கு எந்த பிரச்​சினை வந்​தா​லும் முதலா​வ​தாக குரல் கொடுத்து போராடிய​வர். அவருடைய பெயர் என்​றென்​றும் தமிழ் மக்​களின் இதயத்​தில் இருக்​கும்.

மனதுள் தோன்​றியதை வெளிப்​படை​யாக சொல்​லி​விடு​வார். என்​னைப் பற்​றி​யும் நிறைய விமர்​சனங்​களை வைத்​திருக்​கிறார். உன்னை எனக்கு பிடிக்​கும்; உனது நடிப்பு எனக்கு பிடிக்​காது என்​பார்.

அவருடன் இருந்​தாலே அவ்​வளவு மகிழ்ச்​சி​யாக இருக்​கும். அவர் உயிருடன் இருக்​கும்​போது அவரை பார்க்க முடி​யாத சூழல் ஏற்​பட்டு விட்​டது. அவர் என்​றென்​றும் எனது நினை​வில் இருப்​பார்.

அண்​ணா​மலை: திரைப்​படங்​கள் என்​பவை யதார்த்​தத்தை மீறிய மாய உலகம் என்​பதை மாற்​றி, மண் சார்ந்த, இயல்​பான வாழ்​விய​லாக மாற்​றிய​வர்​களில் பார​தி​ராஜா பல்​கலைக்​கழக​மாகத் திகழ்ந்​தவர். மண்​ணின் மீதும், மக்​களின் மீதும் பேரன்பு கொண்​டிருந்த அவர் மறைவுக்கு எனது கண்​ணீரஞ்​சலியைக் காணிக்​கை​யாக்​கிக் கொள்​கிறேன்.

டிடிவி தினகரன்: கிராமத்​துப் பின்​னணி கொண்ட கதைகளாலும், நடிகர், நடிகை​களின் கதா​பாத்​திர வடிவ​மைப்​பாலும், இன்​னபிற கலைஞர்​களுக்கு முன்​னோடி​யாக​வும் சுமார் அரை நூற்​றாண்டு காலம் தமிழ் சினி​மா​வில் ஆதிக்​கம் செலுத்​திய அற்​புத​மான கலைஞர்.

அன்​புமணி ராம​தாஸ்: தமிழ்த் திரை​யுலக வரலாற்றை பார​தி​ராஜா​வைத் தவிர்த்து விட்டு எழுத முடி​யாது என்று கூறும் அளவுக்கு அவர் படைத்த புது​மை​களும், சாதனை​களும் ஏராள​மானவை.

அவரது முதல் படைப்​பின் பொன்​விழா ஆண்டு கொண்​டாடப்​பட​விருந்த நிலை​யில், அவர் நம்மை விட்டு பிரிந்​திருப்​பது திரை​யுல​குக்கு பெரும் இழப்​பாகும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மு.வீர​பாண்​டியன், திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், நடிகர் சரத்​கு​மார், கருணாஸ் உள்பட பலர் இரங்​கல் தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT