தமிழகம்

‘கங்கை’ மாவட்டத்தில் கதர் கட்சி திட்டம் என்ன? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘கங்கை’ மாவட்டத்தில் கதர் கட்சிக்கு இம்முறை இரண்டு தொகுதிகளை கேட்கும் திட்டத்தில் இருக்கிறாராம் அந்த மாவட்டத்தின் கதர் கட்சி சீமான் தலைவர். ஏற்கெனவே அங்கு ‘குடி’ தொகுதியில் கதர் சிட்டிங்கில் இருக்கிறது.

கூடுதலாக ‘கங்கை’ தொகுதியையும் கணக்குப் போடும் சீமான் தலைவர், “குடியை வாங்குறோம்... கங்கையை கேட்கிறோம்” என தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருகிறாராம். ‘கங்கை’ தொகுதியில் சூரியக் கட்சிக்கு ஆளுமையான தலைகள் இல்லை. அதனால் தேர்தலுக்குத் தேர்ந்தல் இந்தத் தொகுதியை கூட்டணித் தோழர்களுக்கு தந்துவிடுகிறது.

          

கடந்த முறை இந்தத் தொகுதியை கதிர் அரிவாள் பார்ட்டிக்கு தந்தது சூரியக் கட்சி. இப்போது அந்தக் கட்சியிலும் ஆளுமைத் தலைகள் இல்லாததது சீமான் தலைவரை சிந்திக்க வைத்திருக்கிறதாம்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ‘சுந்தரமான’ கல்லூரி அதிபரை ‘கங்கை’ தொகுதியில் நிறுத்த பிளான் போடுகிறாராம் சீமான் தலைவர். ஆனால், தேவர் மக்கள் நிறைந்த தொகுதியில் தேவரல்லாத இவரை நிறுத்தினால் எப்படி சரிப்பட்டு வரும் என கதர் பார்ட்டியிலேயே சிலர் காதைக் கடிக்கிறார்கள்.

சீமான் தலைவர் இப்படி ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, அவரது கார்த்திகைப் புதல்வரோ, ‘குடி’ தொகுதியை வாங்கினால் ராமபிரான் பெயரைக் கொண்ட முன்னாள் எம்எல்ஏ-வும் சீட் கேட்டு தங்களிடம் மோத வருவார் என்பதால் பேசாமல், ‘குடி’ தொகுதியை சூரியக் கட்சிக்கே தந்துவிட்டு ‘கங்கை’யை மட்டும் கதர் கட்சிக்கு கன்ஃபார்ம் பண்ணிக் கொள்ளலாம் என்ற துணைத் திட்டத்துடன் காத்திருக்கிறாராம்.

SCROLL FOR NEXT