தமிழகம்

அதிகாரக் கட்சிக்கே ஆட்டம் காட்டும் கட்சி | உள்குத்து உளவாளி!

செய்திப்பிரிவு

அதிகாரத்தில் பங்கு கேட்டு அதிகாரக் கட்சிக்கே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கட்சி தரப்பில் இம்முறை 30 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறார்களாம். இது சாத்தியமாகுமா என்று தெரியாத நிலையில், இன்னொரு கட்டப் பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

ஆட்சியில் பங்கு கேட்கும் கட்சி கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் 8 தொகுதிகளை இந்த முறை அந்தக் கட்சிக்கு தரமுடியாது என தடாலடியாகச் சொல்லிவிட்ட அதிகாரக் கட்சி, “8 தொகுதிகளையும் மீண்டும் உங்களுக்குக் கொடுத்தால் தேற மாட்டீர்கள்” என்றும் எச்சரிக்கை மணி அடித்துவிட்டதாம்.

          

இதையடுத்து, அந்தத் தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சிண்டிகேட்டை உருவாக்கி இருக்கிறார்களாம். இவர்கள் அனைவரும் தங்களுக்குள் கூட்டம் போட்டுப் பேசி வருவதுடன், “கடந்த முறை கஷ்டப்பட்டுப் போனதற்குக் காரணமே சூரியக் கட்சிக்காரர்கள் ஆங்காங்கே வைத்த சூனியம் தான்” என்று தங்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்த தலைவர்களிடம் வாதப் பிரதிவாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்களாம்.

அத்துடன், “இம்முறையும் தலைமையிடம் பேசி எப்படியாவது நமக்கு அந்த சீட்டைக் கன்ஃபார்ம் பண்ணிருங்க” என்று சொல்லி அதற்கான செலவுகளுக்காக கணிசமான தொகையை போல் கட்டணமாக கட்டி இருக்கிறார்களாம்.

SCROLL FOR NEXT