தமிழகம்

பனையூர் பார்ட்டியும் தாமரை திட்டமும் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

“பனையூர் கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று ‘உள்துறை’ தலைவர் உத்தரவாதம் கொடுத்திருந்தாலும், “பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று உண்மையாகவே நோக்கம் இருந்தால் பனையூர் தம்பியும் எங்கள் பக்கம் வருவது பற்றி யோசிக்க வேண்டும்” என்று தாமரைக் கட்சியின் தமிழக தலைவர்கள் ஊசி விழுந்த ரெக்கார்டு கணக்காகச் ரிபீட் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இதனிடையே, பனையூர் பார்ட்டியில் இருக்கும் ‘குலுக்கல்’ மாப்பிள்ளை வட்டாரத்துக்கு பிராக்கெட் போட்டிருக்கிறாராம் ‘உள்துறை’ தலைவர். பனையூர் பார்ட்டிக்கு ‘பசை’ தரும் சேவையை தொலை நோக்குத் திட்டத்துடனும் இனப் பாசத்துடனும் ‘குலுக்கல்’ மாப்பிள்ளை தான் ஏற்பாடு செய்து வருகிறாராம். மாப்பிள்ளைக்கான சோர்ஸ் மாமனார் தான்.

மாமனாருக்கு வெளி மாநிலங்களில் ‘குலுக்கல்’ வியாபாரம் கருப்பும் வெள்ளையுமாக கனஜோராக கொடிகட்டிப் பறக்கிறதாம். இந்த வியாபாரத்தை கூர்ந்து ‘கவனித்தால்’ பனையூருக்கு பசைப் பஞ்சம் வந்துவிடும். இந்த லாக்கை வைத்துக் கொண்டு பனையூர் பார்ட்டியை இழுத்துப்போடும் பரிட்சார்த்த முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் ‘உள்துறை’ தலைவர்.

SCROLL FOR NEXT