தமிழகம்

சூரியக் கட்சி தாத்தாவின் ‘ஆலோசனை’ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

அண்மையில் பேத்தி கல்யாணத்தை பிரமாதப்படுத்திய சூரியக் கட்சி தாத்தா, தற்போது சொந்தத் தொகுதியில் உட்கார்ந்து கொண்டு சட்டப் புள்ளிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம். மணல் மன்னர்களை அமலாக்கத்துறை தோண்ட ஆரம்பித்திருப்பதை அடுத்து தன்னை நோக்கியும் ஆபத்து வரலாம் என யூகிக்கிறாராம் தாத்தா. அது தொடர்பான சட்ட ஆலோசனைகள்தான் அண்மையில் நடந்ததாம். அது சமயம், மாவட்ட நிர்வாகிகளையும் வரவழைத்து கழக நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினாராம்.

அப்போது தாத்தாவிடம் செல்லமாய் கோபித்துக்கொண்ட நிர்வாகிகள் சிலர், “எல்லாம் சரிண்ணே... பேத்தி கல்யாணத்துக்கு எங்கள கூப்பிடாம விட்டுட்டீங்களே” என்று கேட்டார்களாம். அதற்கு தாத்தா, “நான்தான் உங்கள எல்லாம் நிச்சயதார்த்தத்துக்கு அழைச்சிருந்தேனே... கல்யாணம் மாப்ள வீட்டுல ஏற்பாடு பண்ணாங்க. நானே அங்கே விருந்தாளி மாதிரிதான் கலந்துக்கிட்டேன். நீங்களே அதைப் பாத்திருப்பீங்களே” என்று சொல்லிச் சிரித்தாராம். இருந்தாலும் அதில் சமாதானமடையாத சிலர், “கட்சி வேலை ஆகணும்னா கூப்புடுவாங்க, வீட்டு விசேஷத்துல நம்மள மறந்துடுவாங்க” என்று அலுத்துக்கொண்டு போனார்களாம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT