தமிழகம்

‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவின் சுணக்கம் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘வளத்’ துறைக்கும் சேர்த்து பொறுப்பாக இருக்கும் ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு அந்தத் துறை சம்பந்தப்பட்ட பணிகளை அவ்வளவாய் கண்டுகொள்வதே இல்லையாம். பதவிப்பிரமாணம் எடுத்த நாளில் இருந்து இதுவரை அத்துறை சார்ந்து ஒன்றிரண்டு கூட்டங்களைத்தான் நடத்தியுள்ளாராம்.

தனது பொறுப்பில் இருக்கும் இன்னொரு துறையான ‘வளர்ச்சி’ துறை பக்கம்கூட அவ்வப்போது தலைகாட்டுபவர், ‘வளத்’ துறையை ஏனோ பெரிதாக கண்டுகொள்வதில்லையாம். இதனால் ‘வளத்’ துறையின் செயல்பாடுகள் மிகவும் மேம்போக்கில் இருப்பதாக ஆங்காங்கே புகார்கள் வெடிக்கிறதாம்.

அதேசமயம் டெண்டர் விஷயங்களில் அதிகாரிகளுக்கு போட்டு அனுப்பும் நோட் மட்டும் தப்பாமல் போய்ச் சேர்ந்துவிடுகிறதாம். மற்றபடி ‘வளத்’ துறை விவகாரத்தில் ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு ஆஃப் மோடிலேயே இருப்பதால் துறையின் அதிகாரிகள் டோட்டல் அப்செட்.

கட்சிக்காரர்களின் பஞ்சாயத்துகளை பேசி முடிக்கவும், வேறுபல ‘வரவுகளை’ கவனிக்கவுமே ‘மகிழ்ச்சி’ ஐயாவுக்கு டைம் போதாததால தனது துறையை கவனிப்பதில் கொஞ்சம் சுணக்கமாக இருக்கிறார் என்று விசில் தலைகளே விளக்கம் கொடுக்கிறார்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT