கொங்குச் சீமையில் தேர்தலுக்குத் தேர்தல் வாய்ப்புக் கேட்டு வந்து நிற்கும் தோழர் ’முகத்துக்கு’ இதுவரை டெல்லியோடு சேர்த்து 8 முறை வாய்ப்புக் கொடுத்துவிட்டதாம் கட்சித் தலைமை. அதில் 2 முறை மட்டுமே கோட்டைக்குச் செல்லும் பாக்கியத்தைப் பெற்ற அவர், இம்முறை எப்படியும் தனக்கு தோதான ‘டெய்ல்ராக்’ தொகுதியில் களமிறங்கத் துடிக்கிறாராம்.
ஆனால், அந்தத் தொகுதியிலேயே அவர் சீட் வாங்கிக் கொண்டு போய்விடுவதால் எங்களுக்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடுகிறது” என மாவட்டத்தில் இருக்கும் மற்ற தோழர்கள் மனப்புழுக்கத்தில் இருக்கிறார்களாம்.
இருந்தாலும், கட்சியின் பழைய ‘பேர்ள்’ தலைவரை விடாமல் பிடித்துக் கொண்டு சுற்றும் தோழர் ‘முகம்’, அவர் தயவில் எப்படியும் இம்முறை சீட் வாங்கிவிடுவேன் என நெருக்கமான வட்டாரத்தில் செய்தி பகிர்ந்திருக்கிறாராம். ஆனால், கட்சியின் ‘வீரமான’ தலைவரோ, “ஒருவருக்கே எத்தனை முறை கொடுப்பது? அதெல்லாம் இம்முறை புதியவர்களுக்குத்தான் வாய்ப்பு” என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.