தமிழகம்

அங்​கீ​கார சம்​திங் வழக்​கில் நடப்பது என்ன? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

அங்​கீ​கார சம்​திங் வழக்​கில் சிக்கி இருக்​கும் அந்த ‘ராசகு​மாரரிடம்’ கிடுக்​குப்​பிடி விசா​ரணை நடத்தி இருக்​கும் சம்​திங் ஒழிப்பு அதி​காரி​கள், முன்​னாள் ‘மாண்​புமிகு​வை’ எப்​படி​யா​வது சிக்​கவைக்க முடி​யுமா என்று பார்த்​திருக்​கிறார்​கள். அவர்​களுக்கு அதி​கம் வேலை வைக்​காமல் நிறைய ‘ஸ்​கூப்’ விஷ​யங்​களை கக்​கி​யுள்​ளார் ‘ராசகு​மாரர்’.

அதை வைத்து அடுத்​தகட்​டத்​துக்கு நகர்ந்​தால், முன்​னாள் ‘மாண்​புமிகு​வின்’ கிச்​சன் கேபினட் வரைக்​கும் கிரகப் ‘பலன்​கள்’ நீள்​கிற​தாம். அதனால்​தான் ‘ஆடி’யைச் சேர்ந்த உறவினர் வரைக்​கும் சம்​திங் அதி​காரி​கள் குடைகிறார்​களாம். இதனால் ஆடிப்​போன முன்​னாள் ‘மாண்​புமிகு’, “எது​வாக இருந்​தா​லும் என்​னோடு நிறுத்​திக் கொள்​ளுங்​கள்.

வீட்​டுக்​குள் எல்​லாம் போக வேண்​டாம்” என்று விசில் தலை​வர்​கள் சிலருக்கு விண்​ணப்ப தூது அனுப்​பி​னா​ராம். இந்த விவ​காரத்​தில், ‘ஃபோர்ட்’ மாண்​புமிகு தரப்​பில் சற்றே ஆறு​தலாகப் பேசி இருக்​கிறார்​களாம். அதனால் என்ன விலை கொடுத்​தாவது ‘வீட்​டைக்’ காப்​பாற்றி விடலாம் என்ற தெம்​பில் இருக்​கிறா​ராம் முன்​னாள் ‘மாண்​புமிகு’.

இதற்​கிடையே, மலைக்​கோட்டை பக்​கம் முன்​னாள் ‘மாண்​புமிகு’ பினாமிகளால் நடத்​தப்​பட்டு வரும் 2 ‘ஹைடெக்’ மனமகிழ் மன்​றங்​கள் விதி​களை மீறி செயல்​பட்​ட​தாக அண்​மை​யில் அதி​காரி​களால் சீல் வைக்​கப்​பட்​டது.

ஆனால், ஒரே மாதத்​தில், அதற்​கான ‘சம்​பிர​தாயச் சடங்​கு​களை’ முடித்து மீண்​டும் அதை ஃப்​ரைட்​டாகத் திறந்து விட்​டார்​கள். இதற்கே கோடிகளில் கைமாறு நடந்​த​தாம். அது​போல சம்​திங் பிரச்​சினை​யிலும் ஒரு வழி பிறந்​து​விடும் என்ற நம்​பிக்​கை​யில் இப்​போது கொஞ்​சம் தெம்​பாக இருக்​கிறா​ராம் முன்​னாள்​ ‘மாண்​புமிகு’.

SCROLL FOR NEXT