மதுராந்தகம் இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று பழக்கட்சியின் தலைமை வெளிப்படையாக அறிவித்துவிட்டது. ஆனால், அந்த தொகுதியில் சூரியக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, பழக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தடி இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அதற்குக் காரணம், ஆளும் கூட்டணியில் இருக்கும் சீற்றக் கட்சி தானாம். விசில் அரசாங்கத்தில் இப்போதே அந்தக் கட்சியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில், இடைத் தேர்தலிலும் விசில் சத்தம் அதிகமாகிவிட்டால் சீற்றக் கட்சியை பிடிக்க முடியாது என கணக்குப் போடுகிறார்களாம் பழக் கட்சி நிர்வாகிகள்.
இதையடுத்து மேலிடத்திடம் விஷயத்தை உடைத்துச் சொல்லிவிட்டு தங்களால் முடிந்தவரைக்கும் சூரியக் கட்சிக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்களாம்.