தமிழகம்

விசில் பார்ட்டி ‘மாண்புமிகு’க்களின் பதற்றமும் பின்னணியும் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

யாரை நம்​புவது, யாரை நம்​பாமல் இருப்​பது என்று தெரி​யாமல் விசில் பார்ட்டி ‘மாண்​புமிகு’ மக்​கள் அனை​வரும் அல்​லாடிக் கொண்​டிருக்​கிறார்​களாம். அதற்​குக் காரணம், அவர்​களின் ‘நகர்​வு​களை’ கவனிக்க சீக்​ரெட் குழுக்​கள் போடப்​பட்​டிருப்​ப​தாக பரவும் செய்​தி​தா​னாம். ‘மாண்​புமிகு’க்​களை விட அவர்​கள் தம் உதவி​யாளர்​களை உளவு பார்க்​கவே அதி முக்​கி​யத்​து​வம் அளிக்​கச் சொல்லி இருக்​கிறா​ராம் முதன்​மை​யானவர்.

அப்​படி இருந்​தும் சிலர் அங்​கும் இங்​கு​மாய் ஊடாடிக் கொண்​டிருக்​கிறார்​களாம். இது தெரி​யாமல் அண்​மை​யில் ‘ஃபோர்ட்’ தலை​வரை சந்​தித்த அவரது சமூகத்​தைச் சேர்ந்த தொழில்​துறை​யினர் சிலர் முக்​கிய​மான ஒரு டீல் குறித்​துப் பேச வாயெடுத்​தார்​களாம்.

பதறிப் போய் அவர்​களின் வாயை அடைத்த ‘ஃபோர்ட்’ தலை​வர், “இதப் பத்தி எல்​லாம் இங்க பேச வேண்​டாம். எல்​லாரை​யும் கண்​காணிக்​கிறாங்க. என்​னை​யும் கவனிக்க ஆள் போட்​டிருக்​காங்க. நான் என்ன செய்​யணும் செய்​யக் கூடாதுன்​னும் அவங்​க​தான் தீர்​மானிக்​கிறாங்க.

இதுக்கு முந்தி இத்​தனை கட்​டுப்​பாடுகள நான் சந்​திக்​கல. கரணம் தப்​பினா மரணம் தான் போங்க. இதுல லேசா நான் ஸ்லிப் ஆனாலும் உடனே தூக்​குறதுக்கு ரெடியா இருக்​காங்க. அதனால, இப்​போதைக்கு எது​வும் வேண்​டாம் கிளம்​புங்க. பிறகு பார்க்​கலாம்” என்று அவர்​களை அவசரப்​படுத்தி அனுப்​பி​விட்​ட பிறகே ஆசு​வாச​மா​னா​ராம்​.

SCROLL FOR NEXT