தமிழகம்

‘மலர்ச்சி’ தலைவரின் ‘மிரட்டல்’ பாணி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

பொதுவாக கட்சி நிகழ்ச்சி என்றால், ‘முந்திச் செல்... முடிந்ததைக் கைப்பற்று’ என்றெல்லாம் கடிதம் எழுதி தொண்டர்களை உசுப்பேற்றும் ‘மலர்ச்சி’ தலைவர், இம்முறை மிரட்டல் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறாராம். செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தலைநகரில் ‘அண்ணனுக்கு’ விழா எடுக்கத் தயாராகி வருகிறார் ‘மலர்ச்சி’ தலைவர்.

ஆளில்லாத கட்சி என்பது போல் விசில் கட்சி மூத்த அமைச்சர் அண்மையில் தங்களது கட்சியை போகிற போக்கில் போட்டுத் தாக்கி இருந்ததால் இந்த விழாவில் கூட்டத்தைக் காட்டி பலத்தை நிரூபிக்க நினைக்கிறாராம் தலைவர். அதற்காக கட்சியின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு கைப்பட கடிதம் எழுதி இருக்கும் ‘மலர்ச்சி’ தலைவர், ’விழாவுக்கான வருகைப் பதிவேட்டில் முத்திரை பதிக்க மறந்து, தவறு செய்துவிட்டோமே என வருந்தும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.

விழாவுக்கு வருகை தந்து தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் பின்னால் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை’ என்று சொல்லி இருக்கிறாராம். கிட்டத்தட்ட ஈட்டிக்காரன் கணக்காய் இருக்கும் இந்தக் கடிதத்தைப் பற்றி தான் இப்போது ‘மலர்ச்சி’ கட்சி மக்கள் மத்தியில் பெரும் பேச்சாக இருக்கிறது. “இப்பத்தான் சுல்தான் பேட்டைக்கு போயிட்டு வந்தோம்.

மறுபடியும் விழாவுக்கு வான்னு சொன்னா எப்படி. அதுவும் இப்படி கழுத்துல கத்தி வெச்சு கூப்புடுற மாதிரி கூப்பிட்டா எப்படி புரிஞ்சுக்கிறது? வழக்கமா, கட்சி முக்கிய இடத்துக்கு வரப்போகுது அப்படி அப்படின்னு நயமாப் பேசித்தான் அழைப்பாரு. இப்ப இப்படி டெரரா அழைச்சிருக்கிறாரே” என்று அங்கலாய்க்கிறார்களாம் ‘மலர்ச்சி’ கட்சி மக்கள்.

SCROLL FOR NEXT