தமிழகம்

சக்கர வியூ​கத்​தில் சிக்​குவாரா கரூர் தளபதி? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

ஹார்ஸ் பேர குற்​றச்​சாட்​டில் சுற்றி வளைக்க முடி​யாமல் போன சுறுசுறு கரூர் தளப​தியை வேறு ஏதாவது கொக்​குச் சிக்​கலில் மாட்டித் தூக்கி ‘கோட்​டம்’ பார்க்க விசில் அரசு வேகம் காட்டி வருகிற​தாம்.

தனக்​கெ​தி​ராக வகுக்​கப்​படும் இந்த சக்கர வியூ​கத்​தில் சிக்​காமல் இருக்க கரூர் தளபதி மலர் கட்சி பக்​கம் பேச்​சு​வார்த்தை நடத்தினாராம். அந்​தப் பக்​கம் தெளி​வான சிக்​னல் கிடைக்​காத​தால் தாய்க் கழகத்​துக்கு தாக்​கீது அனுப்​பி​னா​ராம். இதற்கு நடு​வில், சென்னை வந்த உள்​துறை தலை​வரை சந்​திக்க எடக்​கானவர் விரும்​பி​னா​ராம்.

ஆனால், சந்​திப்​புக்கு ஷெட்​யூல் ஒதுக்​க​வில்​லை​யாம். இதன் பின்னணி​யில் கொங்கு ‘மணி​யானவர்’ இருக்​கலாம் என சந்தேகிக்கும் எடக்​கானவர், ‘மணி​யானவருக்​கு’ செக் வைக்க கரூர் தளப​தியை உள்ளே இழுத்​துக் கொள்​ளலாமா என ஆலோ​சனை நடத்தி வரு​கிறா​ராம். அதனால் கொஞ்ச நாளைக்கு தடம் தெரியாமல் இருப்​போம் என முடி​வெடுத்து அமைதி காக்​கிறா​ராம் கரூர் தளப​தி.

இதற்கு நடு​வில், அவருக்கு வேண்​டப்​பட்ட சிப்​பாய்​கள் சிலர் மீண்டும் விசில் எம்​எல்​ஏக்​களை தூக்​கு​வதற்​கான ‘தூண்​டிலைத்’ தூக்கி இருப்​ப​தாக உளவுத் துறை நோட் போட்​டிருக்​கிற​தாம். இவர்களின் இந்த முயற்​சி​யில் தொழில​திபர்​கள் சிலரும் கதர் பார்ட்​டி​யின் காலா​வதி தலை​வர் ஒரு​வரும் கைகோத்​திருப்​ப​தை​யும் உளவுத்​துறை உளவறிந்து சொல்​லி இருக்​கிற​தாம்​.

SCROLL FOR NEXT