தமிழகம்

கடல்​ மாவட்​ட கதர்​ கட்​சி வட்​டார சலசலப்பு | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கடல் மாவட்ட ‘கார்​டன்’ துறை​யில் கடந்த ஐந்து ஆண்​டு​களாக அசைக்க முடி​யாத இடத்​தில் இருந்​தார் அந்த ‘ஐஸ்க்​ரீம்’ நிறுவனத்​தின் பெயர் கொண்ட ‘உத​வி’ அதி​காரி. சூரியக் கட்சி ஆட்​சி​யில் மந்​திரி​யாக இருந்​தவரின் ‘அருட்​பார்​வையே’ அதற்​குக் காரணம் என்று அப்​போது பேச்சு உண்​டு.

இந்த அதி​காரி தனக்கு ‘விசு​வாச​மான’ பெண் அதி​காரி ஒரு​வரை​யும் அந்த மாவட்​டத்​தின் இன்​னொரு அலு​வல​கத்​தில் அதி​காரம் செலுத்த வைத்​திருந்​தார்.

இந்த நிலை​யில் இந்த இரு​வரை​யும் வீழ்த்த சமயம் பார்த்​துக் கொண்​டிருந்​தவர்​கள், ஆட்சி மாறியதும் சொல்ல வேண்​டிய இடத்​தில் சொல்ல வேண்​டிய விதத்​தில் அனைத்​தை​யும் போட்​டுக் கொடுத்​திருக்​கிறார்​கள்.

இதையடுத்து அண்​மை​யில் ‘ஐஸ்க்​ரீம்’ அதி​காரியை அல்வா சிட்​டிக்கு தூக்​கியடித்த அரசு, அவருக்கு ‘விசு​வாச​மான’ அம்​மணி​யை​யும் முத்​துநகருக்கு மாற்றி இருக்​கிறது.

இந்​தத் தகவல் அறிந்​ததும் கடல் மாவட்ட கதர்​பார்ட்​டி​யின் விளைச்​சல் அணி​யின் ஜெய​மான குரு​வானவர் சேனல் செய்​தி​யாளர் ஒரு​வர் சகிதம் பெண் அதி​காரியை பிரத்​யேக​மாகச் சந்​தித்​து, “உங்​களப் பத்​தின ‘மேல​திக’ விஷ​யங்​கள் எங்​கக்​கிட்ட ஆதா​ரத்​தோட இருக்​கு.

அதையெல்​லாம் பப்​ளிக்ல விடாம இருக்​கணும்னா ‘25 எல்’ பார்ட்டி ஃபன்ட் குடுக்​கணும்” என்று டீல் பேசி​னார்​களாம். அரண்​டு​போன அம்​மணி, “அவ்​வளவெல்​லாம் என்​னால முடி​யாது” என்று சொல்லி இறு​தி​யாக ‘3 எல்​’லை எண்​ணிக் கொடுத்​தா​ராம். இப்​போது இந்த விவ​காரத்தை ‘பேக்​கரி டீல்’ கணக்​காய் பிர​மாதப்​படுத்​திப் பேசிக் கொண்​டிருக்​கிறது கடல்​ மாவட்​ட கதர்​கட்​சி வட்​டாரம்​.

SCROLL FOR NEXT