தமிழகம்

‘வினோத’ மாண்புமிகு​ Vs ‘கான்’ மாண்​புமிகு | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘பெரியகோ​யில் மாவட்​டத்​தில் விசில் கட்​சி​யின் ‘வினோத’ மாண்புமிகு​வும் கூட்​ட​ணிக் கட்​சி​யின் ‘கான்’ மாண்​புமிகு​வும் ‘யாருக்கு முதல் மரி​யாதை’ என்​ப​தில் அதி​காரி​களை சுத்​த​விட்​டுக் கொண்டு இருக்​கிறார்​களாம்.

புரோட்​டோ​கால் படி, ‘வினோத’​மானவர் ‘கானை’ விட 11 இடங்​கள் பின்​னால் இருக்​கிறா​ராம். இதனால், அரசு நிகழ்ச்​சிகளுக்கு அழைப்பிதழ் அச்​சடிக்​கும் அதி​காரி​கள், ‘கான்’ பெயரை முதலில் போட்டு அவருக்​குக் கீழே ‘வினோத’​மானவரின் பெயரை போடுகிறார்​களாம். இதைப் பார்த்​து​விட்டு எரிந்து விழுகிறா​ராம் மிஸ்​டர் ‘வினோதம்’.

புரோட்​டோ​கால் எல்​லாம் கிடக்​கட்​டுங்​க... நான் தானே இந்த மாவட்​டத்​துக்கு பொறுப்பு மாண்​புமிகு. என் பேரைத்​தானே நீங்க முதல்ல போட​ணும்” என்று அதி​காரி​களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்​கு​கிறா​ராம். இந்த நிலை​யில், அண்​மை​யில் அந்த மாவட்​டத்​தின் ‘கும்ப’ நகரில் நடை​பெற்ற வேலை​வாய்ப்பு முகாமில் இரண்டு மாண்​புமிகுக்​களும் கலந்​து​கொள்​வ​தாக ஏற்​பாடு.

ஆனால், ‘கானுக்​கு’ முன்​கூட்​டியே இதுகுறித்து தகவல் தெரிவிக்​காத அதி​காரி​கள், அழைப்​பிதழோடு போய் அவரை பார்த்​தார்​களாம். அதை வாங்​கிப் பார்த்​து​விட்​டு, “இந்த நிகழ்ச்சி குறித்து எனக்கு முன்​கூட்​டியே தகவல் சொல்​லாமல் இப்​படி திடீரென வந்து சொன்​னால் எப்​படி?” என்று கேள்வி எழுப்​பியதுடன், “எனது பெயரை எப்​படி இரண்​டாவ​தாக போட்​டீர்​கள்? என்​னால் இந்த நிகழ்ச்​சிக்கு வரமுடி​யாது” என்​றும் சூடா​னா​ராம்.

இதையடுத்து புதி​தாக இன்​னொரு அழைப்​பிதழை ரெடி செய்த அதி​காரி​கள், இரு​வரது பெயரை​யும் அழைப்​பிதழின் இரண்டு பக்​கத்​தி​லும் சரிக்கு சமமாகப் போட்டு சமாளித்​தார்​களாம். அந்த அழைப்​பிதழை பார்த்த பிறகே மிஸ்​டர் ‘கான்’ வேலை​வாய்ப்பு முகாமில் கலந்து கொண்​டா​ராம். மக்​கள் பிரச்​சினை​களை விட இந்த ‘மரி​யாதை’ பிரச்​சினை​தான் பெரியகோ​யில் மாவட்​டத்​தில் அதி​காரி​களுக்​கும் அமைச்​சர்​களுக்​கும்​ இப்​போது பெரும்​ பிரச்​சினை​யாக இருக்​கிறது.

SCROLL FOR NEXT