தமிழகம்

விசில் அடிக்க மறுக்கும் ‘மலர்ச்சி’ கட்சி எம்​எல்​ஏ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘மலர்ச்​சி’ கட்சி எம்​எல்​ஏ-க்​களை ராஜி​னாமா செய்ய வைக்க அவர்களது மனதை கரை​யாய் கரைத்​துக் கொண்​டிருக்​கிறார்​கள். இதில், ‘சீ​ரான’ தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வென்ற செந்திலாண்டவரின் பெயர் கொண்​ட​வரை வழிக்கு கொண்​டுவர முடி​யாமல் திண்​டாடு​கிற​தாம் தலை​மை.

காரணம், செந்​திலாண்​ட​வரின் அம்மா சூரியக் கட்சி தலை​வரின் ‘துர்​கை’ மனை​விக்கு பள்ளி ஆசிரிய​ராம். அந்த பந்​தத்​தில்​தான் செந்திலாண்​ட​வரை ஜெயிக்க வைக்க, தானே களத்​தில் இறங்கி வாக்​குச் சேகரிப்​பில் எல்​லாம் ஈடு​பட்​டா​ராம் சூரி​யத் தலை​வரின் ‘துர்​கை’ மனை​வி.

மேலும், அது தனது சொந்​தத் தொகுதி என்ப​தா​லும் தேர்​தல் செலவுக்கு கூடு​தலாகவே ‘கவனிக்​கச்’ சொல்​லி​யும் கட்சி தலைமைக்கு கரிசன கண்​டிஷன் போட்​டா​ராம். அம்​மணி​யின் வேண்​டு​கோள்​படியே, அந்​தத் தொகு​தி​யில் மேடைப் பிரச்​சா​ரம் மட்டுமல்​லாது சாலை வலம் எல்​லாம் நடத்தி வாக்​குச் சேகரித்​தார் சூரியக் கட்சி தலை​வர்.

”எனக்​காக இவ்​வளவெல்​லாம் செய்​திருக்​கை​யில் அதையெல்​லாம் மறந்​து​விட்டு எப்​படி என்​னால் சூரியக் கட்​சிக்கு விரோத​மாக செயல்பட முடி​யும்?” என்று கேள்வி எழுப்​பும் செந்​திலாண்​ட​வர், “ரொம்ப அழுத்​து​னாங்​கனா ‘மலர்ச்​சி’ கட்​சிக்கு குட்பை சொல்லிருவேன்” என்று தனக்கு நெருக்​க​மானவர்​களிடம் பேசி வரு​கிறா​ராம். வானொலியை கண்​டு​பிடித்​தவரின் பெயர் கொண்டவரைத்​தான் இந்​தத் தொகு​தி​யில் தங்​களது தூணாக நம்பி இருந்​தது ‘மலர்ச்​சி’ கட்​சி.

ஆனால் காலம் முழு​வதும் காசை செல​வழித்து களைத்​துப்​போன அவர், அதற்​கான அங்​கீ​காரம் கிடைக்​காத ஏமாற்​றத்​தில் இலைக் கட்​சி​யில் ஐக்​கிய​மாகி​விட்​டார். அவரை தக்​கவைக்க ‘மலர்ச்​சி’ கட்சித் தலை​வர் மணிக்​கணக்​கில் உட்​கார்ந்து பேசி​யும் பலனில்லாமல் போய்​விட்​டது. அவருக்கு பாடம் புகட்​ட​வே, இம்முறை செந்​திலாண்​ட​வரை களத்​துக்​குக் கொண்டு வந்​தா​ராம் ‘மலர்ச்​சி’ தலை​வர். ஆனால், அவரும் இப்​போது தன்​னுடன் ‘டக் ஆஃப் வார்’ நடத்​திக் கொண்​டிருப்​ப​தால் மூக்கை விடைக்​கிறா​ராம் மு​திர்ச்​சி​யான ‘மலர்​ச்​சி’ தலைவர்​.

SCROLL FOR NEXT