தமிழகம்

விஜயமானவர் விசில் கட்சியில் இணைவது ஏன்? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘கோட்டை’ மாவட்ட இலைக் கட்சியின் ‘விஜயமான’ முன்னாள் மாண்புமிகு, இலைக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை சூரியக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாராம். ஆனால், எதிர்பாராத விதமாக விசில் பார்ட்டி விக்டரி படைத்துவிட்டது. கட்டுமானத்துறையில் பெரிய அளவில் கோலோச்சி வருகிறது விஜயமானவரின் நிறுவனம். அரசின் பெரிய திட்டங்களை எடுத்துச் செய்யுமளவுக்கு நவீன இயந்திரங்களை, தான் அதிகாரத்தில் இருந்தபோதே வாங்கிச் சேர்த்துவிட்டாராம் ‘விஷயமானவர்’.

அதனால் இலைக் கட்சி ஆட்சியில் மட்டுமல்லாது அடுத்து வந்த சூரியக் கட்சி ஆட்சியிலும் அரசு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைப் பணிகள் உள்ளிட்ட காண்ட்ராக்ட்டுகளை விஜயமானவரின் கம்பெனி எடுத்துச் செய்து வந்தது. கடந்த ஆட்சியில் சுமார் 500 ‘சி’ அளவுக்கு தனக்கு காண்ட்ராக்ட்டுகளை ஒதுக்குமளவுக்கு சூரியக் கட்சி தரப்புடன் சுமுக ‘டீல்’ வைத்திருந்தார் விஜயமானவர். ஆனால், அதிகாரம் இப்போது விசில் கைக்கு போய்விட்டதால் அவரின் ‘வருமானத்’ திட்டங்கள் ஸ்தம்பித்து நிற்கிறதாம்.

அதை ‘சகஜ’ நிலைக்கு திருப்பி தனது காண்ட்ராக்ட் தொழிலையும் குவாரி பிசினஸையும் செம்மையாக நடத்துவதற்காகவுமே விஜயமானவர் விசில் கட்சியில் இணையும் முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள். அநேகமாக விசில் தலைவரின் பிறந்த நாளான ஜூன் 22-ல் விஜயமானவர் விசில் கட்சியில் சேரலாம் என்கிறார்கள். அன்றைய தினத்தில் இலைக் கட்சியைச் சேர்ந்த இன்னும் சில முக்கிய தலைகளும் பனையூர் பயணம் மேற்கொள்ளலாம் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT