தமிழகம்

தோற்​றாலும் அதி​காரத்​தில் தூள்கிளப்​பும் விசில் புள்ளி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘ஜெயில்’ மாவட்​டத்​தில் மொத்​தம் உள்ள ஐந்து தொகு​தி​களில் நான்கை கைப்​பற்​றியது ஹீரோ பார்ட்​டி. ‘டேம்’ தொகு​தி​யில் போட்டி​யிட்ட அந்​தக் கட்​சி​யின் கந்​தனின் பெயர் கொண்ட மாவட்டச் செய​லா​ளர் தோற்​றுப் போனார். ஆனால், தோற்​றாலும் அண்​ணன் அதி​காரத்​தில் தூள்​கிளப்​பு​கிறா​ராம். தலைக்கு மொட்டை போட்​டுக் கொண்டு ஒயிட் அண்ட் ஒயிட் சகிதம் ஆங்​காங்கே ஆய்வுக்​குப் போகும் திரு​வாளர் ‘கந்​தன்’, “எம்​எல்​ஏ-க்​கள் எல்​லாம் அவங்க அவங்க தொகு​திக்​குத்​தான் கிங். நான் இந்த மாவட்டத்துக்கே கிங்.

நான் இருக்​கேன்னு சொன்​ன​தால தான் இந்த மாவட்​டத்​துக்கு வேற யாரை​யும் ‘மாண்​புமிகு​வா’ போடாம வெச்​சிருக்கு தலை​மை. அதனால, எம்​எல்​ஏ-க்​களே ஏதும் கோரிக்கை வெச்​சாலும் என்​னையக் கேட்​டுத்​தான் செய்​யணும்” என்று அதி​காரி​களை கிறுக்​குப் பிடிக்க வைக்​கிறா​ராம். தனது ஆய்வு சமாச்​சா​ரங்​களை உடனுக்குடன் வீடியோ ஷூட் எடுத்து இன்​ஸ்​டா​வில் போஸ்ட் போட்டு லைக்​கு​களை எண்​ணிப் பார்த்​தும் மகிழ்​கிறா​ராம்.

இவரது அலப்​பறை​களால் அரண்டு கிடக்​கும் எம்​எல்​ஏ-க்​கள், “ஐயா சாமி... இவரைக் கொஞ்​சம் கன்ட்​ரோல் பண்ணி வைங்க. முடிஞ்சா இவர பொறுப்​பில் இருந்து மாத்​தி​விடுங்க. இல்​லாட்டா இவரே கட்சி மானத்தை வில்​லங்க ‘ஷிப்​’புல ஏத்​திரு​வாரு போலிருக்​கு” என்று தலை​மைக்​கு தகவல்​ சொல்​லி இருக்​கிறார்​களாம்​.

SCROLL FOR NEXT