‘டாக்குமென்ட்’ துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் ’தமிழான’ மாண்புமிகு, தனக்கென பிரத்யேகமாக வீடியோ டீம் ஒன்றை வைத்திருக்கிறாராம். மாண்புமிகு தலைவர் எங்கு சென்றாலும் அவருக்கு முன்னதாக இந்த டீம் ஆஜராகி ‘ஆகவேண்டிய’ வேலைகளை ஷூட் எடுக்கிறதாம். இப்படி எடுக்கப்படும் வீடியோக்கள் உடனுக்குடன் இன்ஸ்டாவில் லைவ் ஆகிறதாம். இந்த ‘லைக்குகளே’ போதும் என நினைக்கும் மாண்புமிகு, பத்திரிகையாளர்களை அவ்வளவாய் விரும்புவதில்லையாம்.
“பத்திரிகைகளில் எல்லாம் செய்தி வரவேண்டிய அவசியம் இல்லை. அதனால் பத்திரிகையாளர்களை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். அவர்களாகவே வந்து எதையாவது எடுத்துப் போட்டால் போட்டுக் கொள்ளட்டும்” என்று போகுமிடமெல்லாம் அதிகாரிகளிடம் ரொம்ப ‘வெவரமாக’ சொல்லி விடுகிறாராம் இந்த வாரிசு அரசியலில் முன்னுக்கு வந்திருக்கும் இந்த மாண்புமிகு.