தமிழகம்

கதர் பார்ட்டியின் பெண் எம்எல்ஏ ஏமாற்றம் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கதர் பார்ட்டியின் பெண் எம்எல்ஏ விசில் அரசின் அமைச்சரவையில் தனக்கும் ஓரமாய் ஒரு இடம் கிடைக்கும் என பெரிதும் நம்பிக் கொண்டிருந்தாராம். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பெண் பிரதிநிதி ஒருவருக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என செய்திகள் கசிந்ததே இதற்குக் காரணமாம். சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த மீனவப் பெண் என்பதால் அவருக்கு மீன் வளத்துறை ஒதுக்கப்படலாம் என்கிற ரேஞ்சில் பெண் எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு காத்திருந்தார்கள்.

ஆனால் சீனியர் கோட்டாவில், அவருக்கான வாய்ப்பை தட்டிப் பறித்துவிட்டாராம் கிள்ளியூர்காரர். அதேசமயம், கிள்ளியூரார் வசம் இருக்கும் சட்டமன்ற கதர் கட்சி தலைவர் பதவியை அம்மணிக்குக் கொடுத்து அவரைச் சமாதானப்படுத்து வதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT