தமிழகம்

அறிவாலயம் ‘நோக்கி’ சிறுத்தை பிரபலங்கள்? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

சிறுத்தை தலைவருக்கு எதிராக அவரது கட்சியின் முக்கிய தலைகள் சிலர் சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார்களாம். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதது உள்ளிட்ட காரணங்களால் தலைவருக்கு எதிராக தகித்துக் கொண்டிருக்கும் அவர்களில் சிலர், விசில் கட்சிக்கும் சூரியக் கட்சிக்கும் விண்ணப்பம் போட்டிருக்கிறார்களாம்.

இதைத் தெரிந்து கொண்ட சிறுத்தை தலைவர், தங்களின் பழைய பங்காளியான விசில் பார்ட்டியின் ‘குலுக்கல் மாப்பிள்ளையை’ கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாகவே சந்தித்து, “எங்காளுங்க யாரையும் உங்க கட்சிக்குள்ள சேர்க்க வேண்டாம்” என்று ‘கேட்’ போட்டுவிட்டு வந்தாராம்.

இதேபோல் சூரியக் கட்சி தரப்பிலும் பழைய ‘பாசத்தில்’ சொல்லி வைத்திருக்கிறாராம். ஆனால், இதையெல்லாம் சட்டைசெய்யாத சிறுத்தை பிரபலங்கள் சிலர், நாளைய தினம் அறிவாலயப் பிரவேசத்துக்கு படை திரட்டிக் கொண்டிருக்கிறார்களாம். இதில், சிறுத்தை கட்சியின் சேனல் பொறுப்பில் இருக்கும் பெயரோடு ஊரையும் சேர்த்து வைத்திருக்கும் தலைவர் முன்கள வீரராய் நிற்கிறாராம்.

SCROLL FOR NEXT