தமிழகம்

பழக் கட்சி பெரியவரின் அவதி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

பழக் கட்சியின் அப்பாவும் பிள்ளையும் சண்டை போட்டுக் கொண்டு போட்டிக்கு போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார்கள். இதில், தனது வேட்பாளர்கள் மகனின் கூட்டணிக்கு பாடம் கற்பிப்பார்கள் என்று அப்பா எதிர்பார்த்தார். ஆனால், அப்பா நிறுத்திய வேட்பாளர்களில் 23 பேர் மூன்று இலக்கத்தில் தான் வாக்குகளை வாங்கி இருக்கிறார்களாம்.

மேட்டுர் ‘அருளாளர்’ மட்டும் தான் நான்கு இலக்கத்தைத் தொட்டாராம். இந்த ரிசல்ட்டால், இனியும் மகனுடன் ஏட்டிக்குப் போட்டி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அப்பா. அதேபோல் அந்தப் பக்கம் மகனும் அப்பாவுடன் சமரசமாய் போய்விடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாராம். இரண்டு பக்கமும் இருக்கும் பெண்மணிகள் தான், ‘விட்டேனா பார்’ என்ற மனநிலையில் விடாப்பிடியாய் இருக்கிறார்களாம்.

மருமகள் அரசியலுக்கு வந்ததை ஏற்றுக் கொள்ளாத பெரியவர், மகனை சமாளிப்பதற்காக மகளுக்கு முக்கியப் பதவியைக் கொடுத்து உட்காரவைத்தார். ஆனால் இப்போது, அப்பா சொல்வதை கேட்கும் மனநிலையில் மகள் இல்லையாம். அந்தப் பக்கம் அவர்கள் இருப்பது போல் நானும் ஒரு ராஜ்யசபா எம்.பி.யாவது ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம் மகள். பெரியவரைச் சுற்றி இருக்கும் சிலரும் வழக்கம் போல் இதற்கு தூபம் போடுகிறார்களாம். அதைக் கேட்டுக்கொண்டு அப்பாவுக்கு தெரியாமலேயே அறிக்கைகளை விடுமளவுக்கு தைரியமாகி விட்டாராம் மகள். இதையெல்லாம் மறுக்கவும் முடியாமல் அனுமதிக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் பழக் கட்சி பெரியவர்.

SCROLL FOR NEXT