விசிலடிச்சு ‘வின்னர்’ ஆன கட்சியோட தலைவருக்கு 118 கணக்கு காட்டுறதுல சிக்கல். கவர்னர் கண்டிஷனா கடிதம் கேட்டதால கொஞ்சம் குழம்பிப் போய் நிக்கிறாராம். கவர்னர்கிட்ட விசில் கட்சி வக்கீல் டீம் பேசிருக்கு. இருந்தாலும் ரூல்ஸ்படி வாங்கன்னு சொல்லிட்டாராம்.
இது இப்படின்னா, கைக் கட்சி பலமா குலுக்கி ஆதரவு தெரிவிச்சதுனால, தமிழ்நாட்டு அரசியல்ல படபடன்னு சீன் மாற ஆரம்பிச்சுருச்சு. ஆதரவு பேச்சுல அதிமுக ஒதுங்க.. பாமக பதுங்க.. டிஎம்கே கூட்டணில இருந்த கட்சிங்க தயங்க... என்னமோ நடக்குதுனு ரீல்ஸ் உருட்ட ஆரம்பிச்சுட்டாங்க இன்ஸ்டா பாய்ஸ்.
பகீர் திட்டத்தோடு திராவிட கட்சிகள் திகில் திருப்பத்துக்கு ரோடு போடறாங்கன்னு தகவல் உருட்டுறாங்க. உள்ள வந்துரும்.. உள்ள வந்துரும்னு எந்தக் கட்சி பேரச் சொல்லி பீதி கிளப்புனாங்களோ, அவங்கள்ட்டயே ‘வெல்லட்டும். வெல்லட்டும்’ ன்னு சரண்டர் ஆயிட்டாங்களாம். பக்கா ஸ்கெட்ச் போட்டாச்சாம்.
பதுங்கச் சிறந்த இடம்னு பாண்டிச்சேரிய செலக்ட் பண்ணி, பெரிய கட்சிகளோட எம்எல்ஏக்கள பேக்கப் பண்ணிட்டாங்கன்னு தகவல் சொல்றாங்க.
நம்புங்கோ நம்புங்கோன்னு சொன்னாலும் நம்பாதவங்க, நறநறன்னு பல்லக் கடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ராத்திரி பூராம், அவருதான் புது சி.எம். சாமியோவ்னு பகீருக்கு பகீர் கிளப்ப ஆரம்பிச்சுட்டாங்க.. ஆட்சில நீ பாதி... நான் பாதி தலைவான்னு பாட ஆரம்பிச்சுட்டாங்களாம். அரசியல்ல எல்லாமே சகஜமாங்க?