தமிழகம்

சிறுத்தை கட்சியில் சீட் மறுக்கப்பட்டவரின் ‘நகர்வு’ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

சிறுத்தை கட்சியில் மீண்டும் சீட் மறுக்கப்பட்ட முக்கியமான மூவரில் இருவர், அந்த வருத்தத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு தேர்தல் பணிக்கு வந்துவிட்டார்கள். ஆனால், ஊரோடு பெயரைச் சேர்த்து வைத்திருக்கும் இன்னொருவர் மட்டும் கட்சித் தலைவரையும் வந்து கண்டுகொள்ளவில்லையாம். தேர்தல் களத்திலும் தலைகாட்டவில்லையாம்.

ரியல் எஸ்டேட் உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்களை கைவசம் வைத்திருக்கும் அவர், அரசியலை வைத்து சம்பாதிக்காவிட்டாலும் அந்த அரசியல் அடையாளத்தை தனது தொழில்களுக்கான கேடயமாக நினைத்தாராம். அப்படி இருந்தும் தலைமை அவரை திட்டமிட்டு ஓரங்கட்டிவிட்டதாம். இந்த நிலையில், கட்சியின் அதிகாரப்பூர்வ ‘ப்ரைட்’ சேனல் நிர்வாகப் பொறுப்பு அவரிடம் தான் இருக்கிறதாம்.

சேனலுக்காக பெரும் பணம் செலவழித்திருக்கும் அவரிடம் இருந்து சேனலை எப்படி கையகப்படுத்துவது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறாராம் கட்சி தலைவர்.

இதற்கிடையே, தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் மீடியா மக்களைக் கூட்டி தனது மன வருத்தத்தை கொட்டத் தீர்மானித்திருக்கும் அந்த எம்எல்ஏ, தேர்தல் முடிவுகளைப் பொறுத்து இலைக் கட்சிக்கோ, விசில் கட்சிக்கோ இடம் மாறும் யோசனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT