தமிழகம்

மலர் கட்சி வேட்பாளர்களும் 20 ‘சி’ பின்புலமும் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

மலர் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக தலா 20 ‘சி’ வரைக்கும் செலவு செய்யத் திட்டமாம். இதில் தென் கோடியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முதல் தவணையாக 2 ‘சி’ வடக்கிலிருந்து அண்மையில் வந்து சேர்ந்ததாம். அந்த மாவட்டத்தில் மலரில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 5 பேருக்குமாகச் சேர்த்து மொத்தமாக வந்தது 10 ‘சி’ யாம்.

அங்கே மலர் கட்சியின் காரிய கர்த்தவாக இருக்கும் ‘கோல்டு’ தலைவர் தனது மருமகன் மூலமாக அந்த 10 ‘சி’யையும் வேட்பாளர்களுக்கு மங்கி கையில் சிக்கிய ’அப்பம்’ கணக்காய் அழகாய் பங்கு வைத்தாராம்.

மாமா சொன்னபடி தலா 10 லட்சத்தை மட்டும் தந்துவிட்டு மீதித் தொகையை அப்படியே தனது அலுவலகத்தில் கொண்டு போய் பதுக்கிவிட்டாராம் வெவரமான மருமகன். ஆனால், வடக்கிலிருந்து வந்த வரவு செலவுகளை மோப்பம் பிடித்துவிட்ட மலர் கட்சி சிஐடி-க்கள் ‘பதுக்கல்’ மேட்டரை பதமாக மேலிடத்துக்கு ‘போட்டுக்கொடுத்து’ விட்டார்களாம்.

இதை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு சாலை வலத்துக்காக பறந்து வந்த விஷ்வ குருவானவர், ‘கோல்டு’ தலைவரிடம் முகம்கொடுத்துக்கூட பேசவில்லையாம். இப்போது, அடுத்து வரப் போகும் தவணைகளை எதிர்பார்த்து ‘அத்தனை’ பேரும் காத்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT