தமிழகம்

மலைக்கோட்டை மாண்புமிகுவின் ‘கவனிப்பு’ உத்தி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

மலைக்கோட்டை மாநகர் ‘வெஸ்ட்டில்’ போட்டியிட ஆலயக் கட்சியின் சார்பில் இரண்டெழுத்து மாண்புமிகு மட்டுமே விருப்ப மனு போட்டிருக்கிறார்.

இதுவரை 5 முறை கோட்டைக்குப் பயணமாகி இருக்கும் இந்த இரண்டெழுத்து மாண்புமிகுவுக்கு எதிராக வம்பு, வழக்குகள் இருப்பதால் இம்முறை சீட் இருக்குமா இருக்காதா என கட்சிக்குள் பட்டிமன்றம் நடத்தப்பட்ட நிலையில், ஆலயத்துக்கு வந்து அடக்கமாக வளைந்து, குனிந்து நின்று நேர்த்தியாக நேர்காணலை முடித்துவிட்டுப் போயிருக்கிறார்.

‘வெட்டி வா என்றால் கட்டி வந்து நிற்பவர்’ எனப் பெயரெடுத்திருக்கும் இந்த மாண்புமிகு. பொதுவாக இதுபோன்ற ஃபீல்டு மார்ஷல்களை எதிர்த்து போட்டியிடச் சொன்னால் எதிரணியில் இருப்பவர்கள் அச்சப்படுவார்கள். ஆனால், இவரை எதிர்த்துப் போட்டியிட இலைக் கட்சி தரப்பில் 39 பேர் முண்டி அடித்து மனு போட்டிருக்கிறார்களாம்.

          

வழக்கமாக, தேர்தலில் போட்டியிடும் மாண்புமிகுக்கள் வாக்காளர்களைத்தான் ‘கவனிப்பார்கள்’. ஆனால், மலைக்கோட்டை மாண்புமிகுவோ, தன்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களையும் உரிய விதத்தில் ‘கவனித்து’ அவர்களையும் தனக்கு ஃப்ரெண்டாக்கி விடுவாராம்.

அதனால், வெற்றி - தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் பலரும் தேர்தல் நேரத்தில் இவரை எதிர்க்க ‘பிரியத்துடன்’ கிளம்பி வருவார்கள். அப்படித்தான் இம்முறையும் இலைக் கட்சியிலிருந்து ‘பிரியமானவர்கள்’ பலரும் வரிசைகட்டி நின்று விருப்ப மனுவை தாக்கிவிட்டுக் காத்திருக்கிறார்களாம்.

SCROLL FOR NEXT