தமிழகம்

பதைபதைப்பில் சூரியக் கட்சியின் மீசைக்கார அண்ணாச்சி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

இம்முறை தனக்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா என பதை பதைப்பில் இருக்கும் சூரியக் கட்சியின் மாண்புமிகு மீசைக்கார அண்ணாச்சி, தனக்குப் பதிலாக தனது வாரிசை களத்துக்கு கொண்டுவரும் ‘பி பிளானையும்’ கைவசம் வைத்திருக்கிறார்.

அதனால் தனக்காக ‘அவார்டு’ நகர் மாவட்டத்தின் தனது சிட்டிங் ‘கோட்டை’ தொகுதியையும் மகனுக்காக ‘தூர்’ தொகுதியையும் தயார்ப்படுத்தி வருகிறார். ஆனால், புதிதாக கூட்டணிக்கு வந்திருக்கும் ‘முரசு’ பார்ட்டிகள் ’கோட்டை’ தொகுதிக்கு கோடு போடுகிறார்களாம். ஆனால், அவர்களை அப்படியே மாவட்டத்தின் ‘அவார்டு நகர்’ தொகுதிக்கு தள்ளிவிட்டு தனது தொகுதியை பக்கா பண்ணத் துடிக்கிறார் அண்ணாச்சி.

          

ஆனால், மகனுக்காக இவர் கேட்கும் ‘தூர்’ தொகுதி இப்போது ‘மறுமலர்ச்சி’ மக்கள் வசம் இருப்பதால் அவர்கள் அதை விரும்பிக் கேட்கிறார்களாம். இதனால், மகனை அப்படியே தனது பிர்காவுக்குள் இருக்கும் ‘பாளையம்’ தொகுதி பக்கம் பாதுகாப்பாக அழைத்துப் போய்விடலாமா என்ற பலமான யோசனையில் இருக்கிறாராம் வெவரமான அண்ணாச்சி.

SCROLL FOR NEXT