பனையூர் பார்ட்டிக்கு ‘பசை’ வரும் வழிகளை கண்டுபிடித்துக் கொடுக்கும்படி உளவுத் துறையை உஷார்படுத்தி இருக்கிறதாம் சூரியக் கட்சி தலைமை.
அதேபோல், தடாகக் கட்சியிலிருந்தும் பனையூர் பார்ட்டிக்கு தேசத்துக்கு வெளியில் இருந்து வந்து இறங்கும் ‘பசை’ விவகாரங்களை விசாரித்து முடித்துவிட்டார்களாம். “தமிழகத்தில் ‘தாமரை’ மலர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும்” என்று சொல்லியே வெளிநாட்டிலிருந்து பனையூருக்கு ‘பசை’ தருபவர்கள் ஆலோசனை சொல்கிறார்களாம்.
இந்த தகவல்களை எல்லாம் திரட்டி இருக்கும் தடாகக் கட்சி தலைமை, “பனையூர் பார்ட்டியைத் ‘தாங்கி’ப் பிடிப்பதுபோல் யாரும் பேசவேண்டாம்” என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறதாம்.
இதனிடையே, கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையும் பனையூர் பார்ட்டியை பதம் பார்க்கும் விதத்திலேயே போய்க் கொண்டிருக்கிறதாம். அதுமட்டுமல்லாது, தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பனையூர் லீடரை ‘பதம் பார்க்க’ ‘மத்திய’ வழக்குகள் சிலவற்றையும் தூசு தட்டி எடுத்து வைத்திருக்கிறார்களாம்.