தமிழகம்

இலைக் கட்சியின் விருப்ப மனு ‘அப்செட்’ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

இலைக் கட்சியில் விருப்ப மனு வாங்கும் வைபவம் எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லையாம். அதனால் தான் தேதியை இன்னும் கொஞ்சம் இழுத்தார்களாம்.

மொத்தமாக 11 ஆயிரம் பேர் மனு கொடுத்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும் கூட்டணி செட் ஆகட்டும் என நினைத்து பலபேர் அமைதியாக இருக்கிறார்களாம். இது கட்சித் தலைமைக்கு பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி இருக்கிறதாம். ஹீரோ கட்சிக்குப் போன ‘கோட்டையன்’ தலைவர் தனது இழுப்பு வலையை இலைக்கட்சி பக்கம் தான் அதிகமாக வீசி வருகிறாராம்.

அதனால், இலைக் கட்சியில் இருக்கும் ‘முன்னாள்’ புள்ளிகள் அந்தப் பக்கம் போகலாம் என்ற சந்தேகம் எடக்கானவருக்கு எக்கச்சக்கமாக இருக்கிறதாம். அதனால், எதிர்பார்க்கப்பட்ட யாரெல்லாம் விருப்ப மனு வாங்கவில்லை... அதற்கு என்ன காரணம் என தனியாக ஒரு புலன் விசாரணைக் குழுவை அமைத்து மாவட்ட வாரியாக விசாரிக்கச் சொல்லி இருக்கிறாராம்.

விசாரணை முடிவில், ஹீரோ கட்சி பக்கம் யாரெல்லாம் நாட்டமாகவும் நோட்டமாகவும் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களை முன்கூட்டியே கட்சியைவிட்டு கழட்டிவிடும் திட்டத்தில் இருக்கிறாராம் தலைவர்.

SCROLL FOR NEXT