கோப்புப் படம்
சென்னை: அரசு வால்வோ பேருந்துகளில் வாரன்ட் வைத்திருக்கும் காவல்துறையினர் பயணிக்கலாம் என விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், தற்போது 20 வால்வோமல்டி ஆக்சில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் வாரன்ட் ஆவணத்துடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என போலீஸார் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், போலீஸாரின் கோரிக்கையை ஏற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, வால்வோ மல்டி ஆக்சில் பேருந்துகளில் வாரன்ட் ஆவணத்துடன் இனி போலீஸார் பயணிக்கலாம். இந்த தகவலை அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு கிளை மேலாளர்கள் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.