புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் திறந்து வைப்பதற்கு முன்னரே நேற்று திமுகவினர் இனிப்பு வழங்கியதை தடுத்த போலீஸார்.

 
தமிழகம்

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம்: பொதுமக்களுக்கு லட்டு கொடுக்க முயன்ற திமுகவினரை எச்சரித்த போலீஸார்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேருந்து நிலை​யத்தை இடித்​து​விட்டு, அதே இடத்​தில் ரூ.18.9 கோடி​யில் நவீன புதிய பேருந்து நிலை​யம் கட்​டும் பணியை 2024 அக்.9-ம் தேதி முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு தொடங்கி வைத்​தார். பேருந்து நிலை​யம் கட்டி முடிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், முதல்​வர் விஜய் இன்று (நவ.2) திறந்​து​வைக்க உள்​ளார்.

திமுக ஆட்​சி​யில் கட்​டப்​பட்ட புதிய பேருந்து நிலை​யம் தற்​போது மக்​கள் பயன்​பாட்​டுக்கு வரஉள்​ளதை​யொட்டி, பேருந்து நிலை​யத்​தில் பொது​மக்​களுக்கு திமுக​வினர் நேற்று இனிப்பு கொடுக்க ஆயத்​த​மாகினர்.

இதையறிந்த போலீ​ஸார், பேருந்து நிலை​யத்​தில் இனிப்பு கொடுக்க அனுமதி இல்லை, மீறினால் கைது செய்​யப்​படுவீர்​கள் என்று எச்​சரித்​தனர். இத​னால், பேருந்து நிலை​யத்​துக்கு செல்​லாமல், வடக்கு ராஜவீதி​யில் உள்ள திமுக மாவட்ட அலு​வல​கத்​தில் மாவட்​டச் செய​லா​ளர் கே.கே.செல்​லபாண்​டியன், எம்​எல்ஏ முத்​துராஜா உள்​ளிட்​டோர் பொது​மக்​களுக்கு லட்டு கொடுக்க முயன்​றனர். அங்​கும் லட்டு கொடுக்​கக் கூடாது என டிஎஸ்பி பிருந்தா தலை​மையி​லான போலீ​ஸார் தடுத்​தனர். ஆனால், அதை மீறி திமுக​வினர் பொது​மக்​களுக்கு லட்டு கொடுக்க முயன்​றபோது, தட்​டுடன் லட்​டுகளை போலீ​ஸார் பறி​முதல் செய்து எடுத்​துச் சென்​றனர்.

இதைக் கண்​டித்து போலீ​ஸாருடன் திமுக​வினர் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டதுடன், சாலை மறியலில் ஈடு​பட முயன்​றனர். இதையடுத்து, பறி​முதல் செய்​யப்​பட்ட லட்​டுகள் திமுக​வினரிடம் திருப்பி வழங்​கப்​பட்​டன.

இது​குறித்து செய்​தி​யாளர்​களிடம் கூறிய கே.கே.செல்​லபாண்​டியன், “திமுக ஆட்​சி​யில் பேருந்து நிலை​யம் மற்​றும் உள்​விளை​யாட்டு அரங்​கம் கட்​டப்​பட்​டதை வரவேற்று, பொது​மக்​களுக்கு இனிப்பு வழங்​கு​வதற்கு அனுமதி வாங்க வேண்​டும் என்று காவல் துறை கூறு​வது தவறு. இனிப்பு வழங்​கு​வதை தடுத்த காவல் துறையை கண்​டிக்​கிறோம். நாளை (இன்று) நடை​பெறும் திறப்பு விழா​வில் பேருந்து நிலை​யத்​துக்​குச் சென்று பொது​மக்​களுக்கு இனிப்பு வழங்க உள்​ளோம்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT