கோப்புப் படம்

 
தமிழகம்

அண்டை மாநிலங்களிலிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல்: எல்லையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: அண்டை மாநிலங்​களி​லிருந்து தமிழகத்​துக்கு போதைப் பொருள் கடத்​தப்​படு​வ​தாக கிடைத்த தகவலை​யடுத்​து, தமிழக எல்​லை​யில் போலீ​ஸார் கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

தமிழகத்​தில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் வாக்​குப் பதிவு ஒரே கட்​ட​மாக நடை​பெற உள்​ளது. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​தல் ஆணை​யம் முழு வீச்​சில் செய்து வரு​கிறது.

          

மேலும் காவல் துறை உட்பட அனைத்து அரசு துறை​களும் தேர்​தல் ஆணை​யத்​தின் மேற்​பார்​வை​யில் இயங்கி வரு​கின்​றன. போலீ​ஸாரும் தேர்​தல் தொடர்​பான பணி​களில் அதி​கள​வில் கவனம் செலுத்தி வரு​கின்​றனர்.

இதைப் பயன்​படுத்தி அண்டை மாநிலங்​களான ஆந்​தி​ரா, கர்​நாட​கா, கேரளா உள்​ளிட்ட மாநிலங்​களி​லிருந்து தமிழகத்​துக்கு சட்ட விரோத​மாக போதைப் பொருட்​கள் மற்​றும் கள்​ளச் சாரா​யத்தை சிலர் கடத்தி வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதையறிந்த போலீஸ் அதி​காரி​கள் மாநில எல்​லை​யில் கண்​காணிப்பை தீவிரப்​படுத்த உத்​தர​விட்​டனர். அதன்​படி, கண்​காணிப்பு மற்​றும் ரோந்​துப் பணி முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளது.

மேலும் அண்டை மாநிலங்​களி​லிருந்து தமிழகம் வரும் ரயில், பேருந்​து களை​யும் போலீ​ஸார் உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கின்​றனர். கடத்​தல் தொடர்​பாக தகவல் கிடைத்​தால் அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொது​மக்​களை காவல் துறை​யினர் கேட்​டுக் கொண்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT