தமிழகம்

பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்பட 350 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

மதுரை/திருநெல்வேலி: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்​டத்​தில் ஈடு​பட்ட பாஜக மூத்த தலை​வர் பொன். ராதாகிருஷ்​ணன், நிர்​வாகி​கள் உட்​பட 350 பேர் மீது 6 பிரிவு​களில் திருப்​பரங்​குன்​றம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இந்த ஆண்டு கார்த்​திகை தீபத் திரு​விழாவையொட்டி, திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யிலுள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால உத்​தரவு பிறப்​பித்​தது. இதற்​கிடை​யில் திருப்​பரங்​குன்​றம் மட்​டுமின்றி, மதுரை நகர் முழு​வதும் மாவட்ட நிர்​வாகம் 144 தடை உத்​தரவு பிறப்​பித்​தது.

ஆனாலும், நீதி​மன்ற உத்​தரவுப்​படி மலை​யிலுள்ள தீபத்​தூணில் ஏற்​றப்​படும் கார்த்​திகை தீபத்தை தரிசனம் செய்ய மலைக்கு கீழே காத்​திருந்த பக்​தர்​கள், இந்து முன்​னணி உள்​ளிட்ட அமைப்​பினருக்கு ஏமாற்​றமே மிஞ்​சி​யது.

எப்​போதும் போன்று உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் மேல் தளத்​தில் மகா தீபம் ஏற்​றப்​பட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து பாஜக, இந்து முன்​னணி உள்​ளிட்ட பல்​வேறு இந்து அமைப்​பினர் மற்​றும் ஏராளமான பக்​தர்​கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி கோயிலுக்கு முன் தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தடையை மீறி அவர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தாக, போலீ​ஸார் வலுக்​கட்​டாய​மாக அவர்​களை கைது செய்து தனியார் மண்​டபத்​தில் அடைத்​தனர். பின்​னர் இர​வில் அனைவரும் விடுவிக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், 144 தடை உத்​தரவு அமலில் இருக்​கும்​போது, போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தாக பாஜக மூத்த தலை​வர் பொன்.ராதாகிருஷ்​ணன், மாநில இளைஞரணி தலை​வர் எஸ்ஜி.சூர்யா, தென்​னிந்​திய பார்​வர்டு பிளாக் நிர்​வாகி திரு​மாறன், இந்து முன்​னணி நிர்​வாகி​கள் மற்​றும் பல்​வேறு இந்து அமைப்​பு​களைச் சேர்ந்​தவர்​கள் என, 300 பேர் மீது அனுமதி​யின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்​கம் விளை​வித்​தல், போக்​கு​வரத்​துக்கு இடையூறு செய்​தல் உள்​ளிட்ட 6 பிரிவு​களின் கீழ் திருப்​பரங்​குன்​றம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இதேபோல் திருநெல்​வேலி பெரு​மாள்​புரத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரன் நேற்று முன்​தினம் காலை​யில் வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டார். பிற்​பகலில் அவர் தனது வீட்​டில் இருந்து தொண்​டர்​களு​டன் மதுரைக்கு காரில் புறப்​பட்​டுச் சென்​றார்.

தச்​சநல்​லூர் செக்​போஸ்ட் அருகே மாநகர போலீ​ஸார் அவரை வழிமறித்து கைது செய்தனர். தடை உத்​தரவை மீறி மதுரைக்கு பயணித்த நயினார் நாகேந்​திரன், மாவட்ட பாஜக தலை​வர் முத்து பல​வேசம் உட்​பட 46 பேர் மீது தச்சநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT