தமிழகம்

இணையவழி மோசடிகளைத் தடுக்க மூத்த குடிமக்களுக்கு போலீஸார் விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் மூத்த குடிமக்​களை குறி​வைத்து நடை​பெறும் இணை​ய​வழி மோசடிகளைத் தடுக்​கும் வகை​யில், சென்னை பெருநகர காவல்​துறை​யின் சைபர் குற்​றப்​பிரிவு சார்​பில் 3 இடங்​களில் விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன.

சைபர் மோசடிகளைத் தடுக்​கும் வகை​யில் விழிப்​புணர்வை அதி​கரிக்​கும்​படி, அனைத்து காவல் நிலைய போலீ​ஸாருக்​கும் சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டுள்​ளார்.

அந்த வகை​யில், திரு​வான்​மியூர் கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள சாய் சுபோதயா அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் சைபர் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் உஷா​ராணி தலை​மை​யிலும், அண்​ணாநகர் மேற்கு பகு​தி​யில் உள்ள ஐசிஐசிஐ வங்கி வளாகத்​தில் காவல் ஆய்​வாளர் வேல்​ராஜ் தலை​மை​யிலும், ஈ.வெ.​ரா. சாலை​யில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்​கிலோ இந்​தி​யன் பள்ளி வளாகத்​தில் காவல் ஆய்​வாளர் தங்​கமணி தலை​மை​யிலும் நேற்று முன்​தினம் விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன.

இந்த நிகழ்ச்​சிகளில் பங்​கேற்ற குடி​யிருப்​பு​வாசிகள், மூத்த குடிமக்​கள் மற்​றும் வங்கி வாடிக்​கை​யாளர்​களுக்கு தற்​போது அதி​கரித்து வரும் இணை​ய​வழி மோசடிகள் குறித்து விரி​வாக எடுத்​துரைக்​கப்​பட்​டது.

இணை​ய​வழி பண மோசடி​யில் பாதிக்​கப்​பட்​டால் கால​தாமதம் செய்​யாமல் உடனடி​யாக www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் குற்​றப் புகார் இணை​யதளத்​தி​லும் புகார் அளிக்​கலாம் என்று அறி​வுறுத்​தப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT