சைபர் மோசடி கும்பலிடமிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து சென்னையில் முதியோருக்கு சைபர் க்ரைம் போலீஸார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

 
தமிழகம்

சைபர் மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க முதியோருக்கு போலீஸார் விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சைபர் மோசடி கும்​பலிட​மிருந்து தப்​பிப்​பது எப்​படி என்பது குறித்து சென்னையில் முதி​யோ​ருக்கு சைபர் க்ரைம் போலீ​ஸார் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தினர்.

இன்​றைய டிஜிட்​டல் உலகில் சைபர் மோசடிகள் வேக​மாக அதி​கரித்து வரு​கின்​றன. போலி இணை​யதளங்​கள், வங்​கித் தகவல் திருட்​டு, ஓடிபி மோசடி, சமூக வலைதள மோசடிகள் மூலம் பொது​மக்​கள் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

இத்​தகைய பாதிப்​பு​களில் இருந்து தங்​களை பாது​காத்​துக்​கொள்ள விழிப்​புணர்​வும், எச்​சரிக்​கை​யும் அவசி​யம். சந்​தேகத்​துக்​கிட​மான இணைப்​பு​களைத் தவிர்த்​து, தனிப்​பட்ட தகவல்​களைப் பகி​ராமல் இருப்​பது பாது​காப்பானதாகும்.

பல சைபர் க்ரைம் குற்றங்கள் முதியோரை குறிவைத்தே நடக்கின்றன. உதாரணமாக சென்​னையைச் சேர்ந்த 69 வயது ஓய்​வு​பெற்ற வங்கி ஊழியர் ஒருவரை தொடர்​பு ​கொண்ட மர்மநபர், தங்​களது நிறு​வனத்​தில் முதலீடு செய்​தால் அதிக லாபம் கிடைக்​கும் என்று கூறி நம்ப வைத்​துள்ளார்.

இதன்பேரில் பல தவணைகளாக ரூ.3.40 கோடியை அந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் இழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்து ஆந்திராவைச் சேர்ந்த கொனத்தலா கிருஷ்ணா என்பவரை கைது செய்தனர்.

இதுபோல சைபர் மோசடி கும்​பல் வலை​யில் முதி​யோர் விழுந்து பணத்தை இழந்து விடு​கின்​றனர். இதை தடுக்​கும் வகை​யில் விழிப்​புணர்வை ஏற்​படுத்த சென்னை காவல் ஆணையர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார்.

அதன்​படி, சைபர் க்ரைம் ஆய்வாளர் உஷா​ராணி தலை​மை​யில் நேற்று முன்​தினம் மாலை நீலாங் ​கரை பகு​தி​யில் உள்ள அதுல்யா முதி​யோர் பராமரிப்பு இல்​லத்​தில் சைபர் குற்​றங்​கள் தொடர்​பான விழிப்​புணர்வு நிகழ்ச்சி நடத்​தப்​பட்​டது.

இதில் முதி​யோரிடம், ஆன்​லைன் முதலீட்டு மோசடிகள், ஆன்​லைன் வர்த்தக மோசடிகள், இணை​ய​வழி பின்​தொடர்​தல், ஏமாற்​று​தல், இணை​ய​வழி துன்​புறுத்​தல், டிஜிட்​டல் கைது மோசடிகள், உயர் அதி​காரி, முதலாளி பெயரில் நடை​பெறும் மோசடிகள், பரிசு மோசடிகள், கூரியர் மோசடிகள், புதி​தாகத் தோன்றி வரும் பிற இணை​ய​வழி மோசடிகள் குறித்து துண்டு பிரசுரங்​கள் வழங்கி விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்​டது.

மேலும் முதி​யோர் சைபர் துன்​புறுத்​தல், மிரட்​டல் அல்​லது இணை​ய​வழி மோசடியை எதிர்​கொண்​டால் உடனடி​யாக சைபர் குற்ற உதவி எண் 1930-ஐ தொடர்​பு​கொள்​வது மற்​றும் www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் க்ரைம் பிரி​வில் புகார் அளிப்​பது குறித்​தும் விளக்​கப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT