தமிழகம்

நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தில் உள்ள காவலர்களை நிபந்தனையுடன் மீண்டும் பணியில் சேர்க்கலாம்

அனைத்து பிரிவு காவல் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி வெங்​கட​ராமன் உத்​தரவு​

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல்​துறை​யில் பல்​வேறு காரணங்​களுக்​காக நீண்​ட​கால​மாக பணி​யிடை நீக்​கத்​தில் இருக்​கும் காவலர்​களை நிபந்​தனை​களு​டன் மீண்​டும் பணி​யில் அமர்த்த டிஜிபி வெங்​கட​ராமன் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள உத்​தரவு: தமிழக காவல்​துறை​யில் லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்​கு​கள், குற்​ற​வியல் வழக்​கு​கள் மற்​றும் துறை சார்ந்த ஒழுங்குநடவடிக்​கைகள் காரண​மாக, 2025 டிச.31 நில​வரப்​படி மொத்​தம் 439 காவலர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதில் 202 காவலர்​கள் ஓராண்​டுக்​கும் மேலாக பணி​யில் இல்​லாமல்உள்ளனர்.

          

வேலை வாங்காமல் ஊதி​யம் வழங்​கு​வது அரசுக்கு இழப்பு என அரசு தரப்பில் சுட்​டிக்​காட்​டப்​பட்​டுள்​ளது. மேலும், நீண்​ட​கால நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் தொழில்​நுட்​பக் காரணங்​களுக்​காக நீதி​மன்​றங்​களால் ரத்து செய்​யப்​படு​வதை​யும் கருத்​தில் கொண்டு இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, கடுமை​யான குற்​றச்​சாட்​டு​ அல்​லது தீவிர​மான ஒழுக்​கக்​கேடு இல்​லாத பட்​சத்​தில், அந்தக் காவலர்​களை மீண்​டும் பணி​யில் சேர்க்க உயர் அதி​காரி​கள் பரிசீலனை செய்​ய​லாம்.

நீதி​மன்​றங்​களில் நீண்​ட​கால​மாக நிலு​வை​யில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்​றும் குற்​ற​வியல் வழக்​கு​களில், தாமதத்​துக்​குத் தெளி​வான காரணங்​கள் இல்​லையெனில், துறைரீதி​யான ஆலோசனைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். குற்​ற​வியல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருந்​தா​லும், அதற்கு இணை​யாக துறைரீதி​யான விசா​ரணையை தொடங்க வேண்​டும்.

மீண்​டும் பணி​யில் சேர்க்​கப்​படும் காவலர்​களுக்​கு சில முக்​கிய கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​படு​கிறது. அதாவது, ஒழுங்கு நடவடிக்கை முடி​யும் வரை, இவர்​களுக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்தபொறுப்​பு​களோ அல்​லது அதி​காரமிக்க பணி​யிடங்​களோ வழங்​கப்​படக் கூடாது.

இவர்​கள் மீதான விசா​ரணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்​ப​டாத வகை​யில் பணி ஒதுக்​கீடு செய்​யப்பட வேண்​டும் அனைத்து பிரிவு காவல்​துறை உயர் அதி​காரி​களும் தங்​கள் எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​களில் உள்ளபணி​யிடை நீக்க வழக்​கு​களை ஆய்வு செய்​து, தகு​தி​யானவர்​களை உடனடி​யாக மீண்​டும் பணி​யில் சேர்க்க வேண்​டும். இது குறித்த அறிக்​கையை பிப்​.13-க்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT