கோப்புப் படம்

 
தமிழகம்

​போதைப் பொருள் கடத்தலை தடுக்க ஆம்னி பேருந்துகளில் போலீஸார் திடீர் சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: போதைப் பொருள் கடத்​தலைத் தடுக்​கும் நடவடிக்​கை​யின் ஒரு பகு​தி​யாக தமிழகம் முழு​வதும் ஆம்னி பேருந்​துகளில் போலீ​ஸார் திடீர் சோதனை நடத்​தினர்.

தமிழகத்​தில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையை தடுக்க போலீ​ஸார் பல்​வேறு தொடர் நடவடிக்​கைகளை எடுத்து வரு​கின்றனர். தொடக்​கத்​தில் ரயில்​கள் மூலம் மட்​டுமே கடத்​தப்​பட்ட போதைப் பொருட்​கள் தற்​போது ஆம்னி பேருந்​துகளி​லும் கடத்​தப்​படு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதையடுத்​து, இது​போன்ற கடத்​தல்​களை முற்​றி​லும் தடுத்து நிறுத்​த​வும், தவறு செய்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும் அனைத்து மாவட்ட போலீஸாருக்​கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் உத்​தர​விட்​டார்.

இதையடுத்து கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்​கிய நகரங்​களின் ஆம்னி பேருந்து நிலை​யங்​களில் மோப்ப நாய் உதவி​யுடன் போலீ​ஸார் நேற்று முன்​தினம் நள்​ளிரவு முதல் விடிய விடிய சோதனை நடத்​தினர். இதுகுறித்து, போலீஸ் அதி​காரி​கள் கூறும்போது, ‘வி​தி​களை மீறி போதைப்​பொருள் கடத்​தலுக்​குத் துணை போகும் ஆம்னி பேருந்​துகளின் உரிமத்தை நிரந்​தர​மாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும்​, இந்​த நடவடிக்​கை தொடரும்’ என்றனர்.

SCROLL FOR NEXT